ஈரோட்டில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல் - தலைமை தேர்தல் அதிகாரி அறிவிப்பு! - Seithipunal
Seithipunal


கடந்த சில தினங்களுக்கு முன்பு ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ., திருமகன் ஈவெரா உடல்நலக்குறைவு காரணமாக  உயிரிழந்தார்.

இதனையடுத்து ஈரோடு கிழக்கு தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்ட நிலையில், அந்த தொகுதியின் இடைத்தேர்தல் தேதி எந்நேரமும் அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில், அந்த தொகுதிக்கான தேர்தல் தேதியை இன்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி, 

தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் ஜனவரி 31ம் தேதி முதல் தொடங்கும், 
வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாள் பிப்ரவரி 7ம் தேதி,
வேட்புமனு பரிசீலனை பிப்ரவரி 8ம் தேதியும், 
வேட்புமனு திரும்ப பெறும் நாள் பிப்ரவரி 10 என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

வாக்குப்பதிவு பிப்ரவரி மாதம் 27ம் தேதி நடைபெறும் என்றும், வாக்கு எண்ணிக்கை மார்ச் 2ம் தேதி நடைபெறும் என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 

இந்நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் நடத்தும் அதிகாரியாக நகராட்சி ஆணையர் சிவக்குமார் நியமிக்கப்படுவதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு அறிவித்துள்ளார்.

மேலும், ஈரோடு கிழக்கு தொகுதிக்கு தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால், ஈரோடு மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளது என்றும், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார். 


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Erode East By Election 2023 election Rule


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->