ஈரோடு கிழக்கு: சீமானும் பின்வாங்கினாள் என்ன ஆகும் இடைத்தேர்தல்? நாம் தமிழர் vs திமுக!
Erode east by election seeman dmk admk bjp ntk
2026 சட்டமன்ற பொது தேர்தலுக்கு முன்னோட்டமாக பார்க்கப்பட்ட ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியின் இடைத்தேர்தல், எதிர்க்கட்சிகளின் புறக்கணிப்பால் சுவாரசியமே இல்லாமல் மாறி உள்ளது.
வருகின்ற பிப்ரவரி 5ஆம் தேதி ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இந்த தேர்தலை பிரதான எதிர்க்கட்சியான அதிமுக, நடிகர் விஜயின் தமிழக வெற்றி கழகம் புறக்கணிப்பதாக அறிவித்துள்ளது.
இந்த நிலையில், தேசிய ஜனநாயக (பாஜக) கூட்டணியும் இந்த தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளது. கடந்த இடைத்தேர்தலில் மக்களை கால்நடைகளைப் போல அடைத்து வைத்து ஜனநாயக விரோதமான ஒரு தேர்தலை திமுக நடத்தும் என்பதால், இந்த இடை தேர்தலை புறக்கணிப்பதாக பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை விளக்கம் அளித்துள்ளார்.
தற்போது வரை ஆளுங்கட்சியான திமுக மட்டுமே வேட்பாளரை அறிவித்து தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளது. நாம் தமிழர் கட்சி இந்த இடைத் தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்துள்ளது. மேலும் வருகின்ற பொங்கல் தினத்தன்று வேட்பாளரை அறிவிக்க உள்ளதாக கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் இந்த ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் திமுக vs நாம் தமிழர் கட்சி என இருமுனைப் போட்டியாக தேர்தல் களம் அமைந்துள்ளது.
அதே சமயத்தில் பிரதான எதிர்க்கட்சிகள் இடைத்தேர்தலில் புறக்கணித்து உள்ளதால், திமுகவிற்கு பாடம் புகட்ட போகிறேன் என்று நாம் தமிழர் கட்சியும் இந்த தேர்தலை புறக்கணிக்க வாய்ப்பு இருப்பதாகவும், அப்படி புறக்கணித்தால் தமிழக அரசியல் வரலாற்றில் இந்த இடைத்தேர்தல் ஒரு கரும்புள்ளியாக அமையும் என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்.
English Summary
Erode east by election seeman dmk admk bjp ntk