அதிமுக-பாஜக கூட்டணி முறிந்தது... தனித்து களம் காணும் பாஜக ..!!
Erode East Constituency Byelection BJP alone contest
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பாஜக தனித்துப் போட்டி..?!
தமிழகத்தில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாஜக அங்கம் வகித்தது. கடந்த 2019ஆம் ஆண்டு நாடாளுமன்ற பொது தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாஜக இடம் பெற்றிருந்தது. அதனை தொடர்ந்து நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் பாஜக தனித்துப் போட்டியிட்டது. அதனைத் தொடர்ந்து தமிழக பாஜகவிற்கும் அதிமுகவிற்கும் இடையே அவ்வப்பொழுது கருத்து மோதல் ஏற்பட்டு வந்தது. இருப்பினும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அதிமுக கூட்டணியில் பாஜக நீடிப்பதாக அறிவித்திருந்தார்.
இந்த நிலையில் சமீபத்தில் உடல்நல குறைவால் ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் திருமகன் ஈவேரா காலமானார். இதனைத் தொடர்ந்து ஈரோடு கிழக்கு தொகுதி காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது. இதன் காரணமாக நேற்று மூன்று மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தேதி அறிவிக்கும் போது ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் தேதியும் அறிவிக்கப்பட்டது. அதன்படி வரும் பிப்ரவரி 27ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்ற மார்ச் 2ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.
அதிமுக கூட்டணியில் பாஜக நீடிப்பதாக அறிவித்த அண்ணாமலை திடீரென நேற்று இரவு தேர்தல் பணிகளை கவனிக்க பாஜக சார்பில் மாநில குழுவை அமைத்துள்ளார். இது குறித்து தமிழக பாஜக தலைவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தேர்தல் பணிகளை முழுமையாக கவனிக்கவும், ஒருங்கிணைக்கவும் மாநில அளவில் குழு அமைக்கப்படுகிறது. அந்த குழுவில், V.C.வேதானந்தம், பாஜக எம்எல்ஏ சரஸ்வதி, N.P.பழனிசாமி உள்ளிட்ட 14 பேர் கொண்ட குழுவை நியமித்துள்ளார்.
திமுக கூட்டணி கட்சியான காங்கிரஸ் கடந்த தேர்தலில் போட்டியிட்டதை போன்றவை இடை தேர்தலில் போட்டியிட வாய்ப்புள்ளதாக தகவல் கசிந்துள்ளது. அதேபோன்று அதிமுக கூட்டணியில் இருப்பதாக தெரிவித்த அண்ணாமலை எந்தவித ஆலோசனையும் இன்றி பாஜகவின் தேர்தல் பொறுப்பாளர்களை நியமித்துள்ளது கூட்டணி முறிவை உறுதிப்படுத்தியுள்ளது. மேலும் தமிழக பாஜக சார்பில் கருப்பு முருகானந்தம் போட்டியிட உள்ளதாக தகவல் கசிந்துள்ளது. எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பு பல்வேறு அரசியல் திருப்பங்களை தமிழகம் சந்திக்க நேரிடும் என அரசியல் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
English Summary
Erode East Constituency Byelection BJP alone contest