அதிபர் பதிவிலிருந்து விலகினார் கோத்தபய ராஜபக்சே.!!
Gotabaya rajapaksa signed the resignation letter
இலங்கையில் கடந்த 70 ஆண்டுகளில் இல்லாத வகையில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. கடுமையான அந்நிய செலாவல்லி பற்றாக்குறையால் அத்தியாவசிய உணவுப் பொருட்கள் விலை ஏற்றம் மற்றும் பற்றாக்குறை ,எரிபொருள் தட்டுப்பாடு உள்ளிட்ட பல்வேறு சூழல்களால் மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.
இதையடுத்து மக்கள் நடத்தி வரும் போராட்டம் உச்சக்கட்டத்தை இயற்றியுள்ளதுஎட்டியது. இலங்கை அதிபர் கோத்தபாய ராஜபக்சே மாளிகை கைப்பற்றிய போராட்டக்காரர்கள் பொருட்களை கைப்பற்றியதுடன் அங்கு தங்கி வருகின்றனர். மேலும், அதிபர் மாளிகையை போராட்டக்காரர்கள் ஆக்கிரமித்தனர்.
இதனிடையே இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவின் தனிப்பட்ட இல்லத்திற்கு போராட்டக்காரர்கள் தீ வைத்தனர். இதற்கு முன்னதாக ரணில் விக்கிரமசிங்கே அந்த வீட்டில் இருந்து பாதுகாப்பாக வெளியேறி உள்ளார்.
முன்னதாக நடைபெற்ற அனைத்து கட்சி கூட்டத்தில் பிரதமர் பதவியில் இருந்து ரணில் விக்ரமசிங்கே விலக வலியுறுத்தப்பட்டுள்ளது. இது எடுத்து ரணில் விக்ரமசிங்கே ராஜினாமா செய்ய தயார் என தெரிவித்துள்ளார். அதேபோல இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின் அடிப்படையில் அதிபர் பதிவில் இருந்து விலகுமாறு கோத்தபய ராஜபக்சேவை வலியுறுத்தி சபாநாயகர் அபேவர்தன கடிதம் எழுதியிருந்தார்.
இந்நிலையில், கோத்தபய ராஜபக்சே பதவி விலகல் கடிதத்தில் கையெழுத்திட்டார். நாளை தனது பதிவை ராஜினாமா செய்வதாக ஜூலை 13 என தேதி குறிப்பிட்டு கோத்தபய ராஜபக்சே ராஜினாமா கடிதத்தில் கையெழுத்திட்டுள்ளார்.
English Summary
Gotabaya rajapaksa signed the resignation letter