இலங்கையை விட்டு வெளியேறிய கோத்தபய ராஜபக்சே.!!
Gotabaya rajapaksa takes refuge in Maldives
இலங்கையில் கடந்த 70 ஆண்டுகளில் இல்லாத வகையில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. கடுமையான அந்நிய செலாவல்லி பற்றாக்குறையால் அத்தியாவசிய உணவுப் பொருட்கள் விலை ஏற்றம் மற்றும் பற்றாக்குறை ,எரிபொருள் தட்டுப்பாடு உள்ளிட்ட பல்வேறு சூழல்களால் மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.
இதையடுத்து மக்கள் நடத்தி வரும் போராட்டம் உச்சக்கட்டத்தை எட்டியது. இலங்கை அதிபர் கோத்தபாய ராஜபக்சே மாளிகை கைப்பற்றிய போராட்டக்காரர்கள் பொருட்களை கைப்பற்றியதுடன் அங்கு தங்கி வருகின்றனர். இதையடுத்து, இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவின் தனிப்பட்ட இல்லத்திற்கு போராட்டக்காரர்கள் தீ வைத்தனர்.
இதையடுத்து நடைபெற்ற அனைத்துக்கட்சி கூட்டத்தில் பிரதமர் பதவியில் இருந்து ரணில் விக்ரமசிங்கே விலக வலியுறுத்தப்பட்டுள்ளது. அதேபோல அதிபர் பதிவில் இருந்து விலகுமாறு கோத்தபய ராஜபக்சேவை வலியுறுத்தினார்.
நேற்று கோத்தபய ராஜபக்சே பதவி விலகல் கடிதத்தில் கையெழுத்திட்டார். இன்று தனது பதிவை ராஜினாமா செய்வதாக ஜூலை 13 என தேதி குறிப்பிட்டு கோத்தபய ராஜபக்சே ராஜினாமா கடிதத்தில் கையெழுத்திட்டுள்ளார்.
இந்நிலையில், இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே மாலத்தீவுகளில் தஞ்சம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விமானப்படை விமானம் மூலம் இலங்கையை விட்டு வெளியேறினார்.
English Summary
Gotabaya rajapaksa takes refuge in Maldives