இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே ராஜினாமா.. அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு.!! - Seithipunal
Seithipunal


இலங்கையில் கடந்த 70 ஆண்டுகளில் இல்லாத வகையில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. கடுமையான அந்நிய செலாவல்லி பற்றாக்குறையால் அத்தியாவசிய உணவுப் பொருட்கள் விலை ஏற்றம் மற்றும் பற்றாக்குறை ,எரிபொருள் தட்டுப்பாடு உள்ளிட்ட பல்வேறு சூழல்களால் மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். 

இதையடுத்து, அதிபர் கோத்தபாய ராஜபக்சே மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே பதவி விலக வலியுறுத்தி மக்கள் நடத்தி வரும் போராட்டம் உச்சக்கட்டத்தை எட்டியது. அதன்பிறகு நடைபெற்ற அனைத்துக்கட்சி கூட்டத்தில் பிரதமர் பதவியில் இருந்து ரணில் விக்ரமசிங்கே விலக வலியுறுத்தப்பட்டுள்ளது. அதேபோல அதிபர் பதிவில் இருந்து விலகுமாறு கோத்தபய ராஜபக்சேவை வலியுறுத்தினார்.

இதனைத்தொடர்ந்து தனது பதிவை ராஜினாமா செய்வதாக ஜூலை 13 என தேதி குறிப்பிட்டு, கோத்தபய ராஜபக்சே ராஜினாமா கடிதத்தில் 
கையெழுத்திட்டார். ஆனால் அந்த கடிதம் கிடைக்கவில்லை என சபாநாயகர் தெரிவித்தார்.

இந்நிலையில், இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே ராஜினாமா செய்ததாக சபாநாயகர் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். புதிய அதிபர் தேர்வு செய்யப்படும் வரை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே அதிபராக செயல்படுவார் என விளக்கம் அளித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Gotabaya rajapaksa will resign


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->