இனி ஆடு, மாடு வளர்த்தா 500 ரூபாய் கட்டணம்! மதுரை மாநகராட்சி அறிவிப்பு - கொந்தளிக்கும் மக்கள்!
House Bird Animals Madurai Cow Goat Madurai Tax
மதுரை மாநகராட்சியில் வீடுகளில் பறவைகள் மற்றும் விலங்குகள் வளர்ப்பதற்கு கட்டணம் வசூலிக்க மாமன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்த தீர்மானத்திற்கு பொதுமக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
மாடு வளர்ப்பதற்கு 500 ரூபாய், குதிரை வளர்ப்பதற்கு 750 ரூபாய், ஆடு வளர்ப்பதற்கு 150 ரூபாய், பன்றி வளர்ப்பதற்கு 500 ரூபாய், நாய் மற்றும் பூனை வளர்ப்பதற்கு 750 ரூபாய் என கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இந்த தீர்மானத்திற்கு பொதுமக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. ஏற்கனவே பல்வேறு வரிகளால் அவதிப்பட்டு வரும் நிலையில், இது மேலும் சுமையை அதிகரிப்பதாக பொதுமக்கள் கூறுகின்றனர்.
இந்த தீர்மானத்தை மாநகராட்சி நிர்வாகம் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
English Summary
House Bird Animals Madurai Cow Goat Madurai Tax