என்னையும், என் சாதியையும் அசிங்கப்படுத்திட்டாங்க! இசைவாணி புகார்! 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு!  - Seithipunal
Seithipunal


2019ஆம் ஆண்டில் பா. ரஞ்சித் தலைமையிலான "காஸ்ட்லெஸ் கலெக்ஷன்ஸ்" இசைக்குழுவில் இசைவாணி பாடிய "I Am Sorry Ayyappa" பாடல் இணையத்தில் மீண்டும் வைரலானது.

இந்த பாடல் சபரிமலை அய்யப்பன் கோவில் சார்ந்த பக்தி சடங்குகளுக்கும், பெண்களின் கோவிலுக்குள் அனுமதி தொடர்பான விவகாரங்களுடனும் தொடர்புடையதாக கருதப்படுகிறது. 

இசைவாணியின் பாடலுக்கு எதிராக தமிழக பாஜக மூத்த தலைவர் ராஜா உள்ளிட்ட பலரும் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.  

மேலும், இசைவாணியை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்வேறு காவல் நிலையங்களில் புகார் செய்யப்பட்டது.

இந்நிலையில், தன்னையும், தனது சாதியையும் பற்றி சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பப்படுவதாக பிரபல பாடகி இசைவாணி புகார் அளித்துள்ளார்.

இந்த புகாரின் அடிப்படையில், சைபர் கிரைம் போலீசார் 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Isaivani Complaint Police Case file


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->