மாஸ் வெற்றி! முதல்வர் நாற்காலி யாருக்கு? உடைகிறது பாஜக கூட்டணி?! வெடித்தது பூகம்பம்!
Maharashtra Election 2024 CM Post BJP Alliance may be break
மகாராஷ்டிரா மாநிலத்தில் பாஜக கூட்டணி ஆட்சி அமைப்பது 100% உறுதியாகியுள்ளது. மொத்தமுள்ள 288 தொகுதிகளில் பாஜக கூட்டணி 223 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளன.
இதில், பாஜக மட்டும் 129 இடங்களிலும்,
ஏக் நாத் ஷிண்டே சிவா சேனா 56 இடங்களிலும்,
அஜித் பவார் NCP 39 இடங்களிலும் முன்னிலை பெற்றுள்ளன.
காங்கிரஸ் கூட்டணியை பொறுத்தவரை..
காங்கிரஸ் 20 இடங்களிலும்,
உதவி தாக்ரே சிவா சேனா 19 இடங்களிலும்,
சரத் பவார் NCP 12 இடங்களிலும்,
கம்னியூஸ்ட் 2 இடங்களிலும் முன்னிலை பெற்றுள்ளன.
இந்நிலையில், மகாராஷ்டிரா மாநில முதல்வர் யார்? என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏற்கனவே பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ் தான் முதலவர் என்று உறுதியாக சொல்லப்பட்ட நிலையில், அம்மாநில மக்களும் அதனை உறுதிப்படுத்தும்படி பாஜகவிற்கு வாக்குகளை வாரி வழங்கி முதல் இடம் கொடுத்து, தனிப்பெரும் கட்சியாக தேர்ந்தெடுத்துள்ளது முன்னிலை நிலவரங்கள் தெரிவிக்கின்றன.
இப்போது சிக்கல் என்னவென்றால், பெரிய கட்சிக்கு தான் முதல்வர் பதவி என்ற ஒப்பந்தம் எங்கும் செய்யப்படவில்லை என்று, ஏக்நாத் ஷிண்டே கொடுத்த பேட்டிதான்.
இன்னொரு பக்கம் அஜித் பவார் தான் முதல்வர் என அவரது மனைவி பேட்டி கொடுத்து அதிர வைத்துள்ளார். மேலும், ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனா அபார வெற்றி பெற்றதை தொடர்ந்து என் அப்பா தான் முதல்வர் என ஷிண்டேவின் மகனும் பேட்டியளித்த பூகம்பத்தை கிளப்பியுள்ளார்.
இந்த பக்கம் தேவேந்திர பட்னாவிஸ் தான் முதல்வர் என பா.ஜ.கவின் தொண்டர்கள் ஆங்காங்கே வெற்றி முழக்கம் எழுப்பி வருகிறார்கள். மேலும், உள்துறை அமைச்சர் அமித்ஷா, தேவேந்திர பட்னாவிஸை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசி உள்ளார்.
இப்படி முதல்வர் நாற்காலிக்கு பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. இதனால் இந்த கூட்டணி உடையவும் வாய்ப்பு உள்ளதாக சொல்லப்படுகிது.
அப்படியே கூட்டணி உடைந்தாலும், பாஜக எப்படியும் தனது தலைமையில் ஆட்சியை அமைக்கும் என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்.
கடந்த சட்டமன்ற தேர்தலில் பாஜக சிவசேனா கூட்டணி ஆட்சி அமைத்தும், ஆட்சியில் சம பங்கு என பாஜக கொடுத்த வாக்குறுதியின் அடிப்படையில் சுழற்சி முறையில் தங்களுக்கு முதல்வர் பதவி வேண்டும் என்று உத்தவ் தாக்கரே கேட்டு அதை தர மறுத்த பாஜக சிவசேனாவை இரண்டாக உடைத்து நிலைமையை சரி செய்ய ஏக் நாத் ஷிண்டேவிற்கு முதல்வர் பதவியை கொடுத்துவிட்டு துணை முதல்வர் பதவியை பட்னாவிஸ் ஏற்றார் என்பதால், இப்போது அவர் தான் சிக்கலை உண்டாக்குவார் என்று சொல்லப்படுகிறது.
English Summary
Maharashtra Election 2024 CM Post BJP Alliance may be break