மகாராஷ்டிரம், ஜார்க்கண்ட் தேர்தல் முடிவுகள் 0 பிரதமர் மோடி போட்ட டிவிட்!
Maharashtra Jharkhand Assembly Election2024 pm modi wish
மகாராஷ்டிரம் மற்றும் ஜார்க்கண்ட் மாநில சட்டமன்ற பொதுத் தேர்தலில் வெற்றி பெற்றவர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிரம் மற்றும் ஜார்க்கண்ட் மாநில சட்டமன்ற பொதுத் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.
மகாராஷ்டிரா : பாஜக, சிவசேனை (ஷிண்டே), தேசியவாத காங்கிரஸ் (அஜீத் பவாா்) கட்சிகளின் ‘மகாயுதி’ கூட்டணி - 233 இடங்களில் முன்னிலை பெற்று மீண்டும் ஆட்சியமைப்பது உறுதியாகியுள்ளது.
ஜாா்க்கண்ட் மாநிலத்தில், ஜாா்க்கண்ட் முக்தி மோா்ச்சா, காங்கிரஸ் கட்சிகளின் ‘இண்டி’ கூட்டணி மீண்டும் ஆட்சியமைப்பது உறுதியாகியுள்ளது.
13 மாநிலங்களில் நடந்த 46 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் பாஜக கூட்டணி 25 க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றிபெற்று அசத்தியுள்ளது. இரு மக்களவை இடைத்தேர்தலில் பாஜக, காங்கிரஸ் தலா ஒரு இடங்களில் வெற்றிபெற்றுள்ளது.
இந்நிலையில், இந்த தேர்தலில் முடிவுகள் குறித்து பிரதமர் மோடி வெளியிட்டு செய்திக்குறிப்பில், "மகாராஷ்டிரத்தில் நல்லாட்சிக்கு மீண்டும் வெற்றி கிடைத்துள்ளது. கூட்டணி ஒற்றுமையும், வளர்ச்சியும் வெற்றி பெற்றுள்ளது. களத்தில் பணியாற்றிய தேசிய ஜனநாயக கூட்டணி நிர்வாகிகளுக்காக பெருமைப்படுகிறேன். சிறப்புமிக்க வெற்றியை வழங்கிய மகாராஷ்டிர மக்களுக்கு நன்றி.
பாஜக கூட்டணிக்கு வாக்களித்த ஜார்க்கண்ட் மக்களுக்கு நன்றி. மக்கள் பிரச்னைகளை தீர்ப்பலும், மாநிலத்திற்காக உழைப்பதிலும் முன்னணியில் இருப்போம். ஆட்சியமைக்க உள்ள ஜேஎம்எம் தலைமையிலான கூட்டணியை வாழ்த்துகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
English Summary
Maharashtra Jharkhand Assembly Election2024 pm modi wish