சென்னையில் சீமான் கைது!
Naam Thamizhar katchi Seeman Anna University Harassment case
சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமையை கண்டித்து நாம் தமிழர் கட்சி சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டு இருந்தது.
வள்ளுவர்கோட்டத்தில் நடக்க இருந்த இந்த போராட்டத்திற்கு போலீசார் அனுமதி வழங்காத நிலையில், அனுமதியின்றி போராட்டம் நடத்த முயன்ற நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை போலீசார் கைது செய்துள்ளனர்
முன்னதாக, மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவோம்! அண்ணா பல்கலைக்கழக வளாகத்திற்குள் மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதைக் கண்டித்து, நாம் தமிழர் கட்சியின் மகளிர் பாசறை, இளைஞர் பாசறை மற்றும் மாணவர் பாசறை ஒன்றிணைந்து, இன்று காலை 10 மணியளவில் சென்னை வள்ளுவர்கோட்டத்தில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கவிருக்கின்றது. மானத்தமிழரெல்லாம் மறக்காமல் கூடுவோம்! என்று சீமான் அறைகூவல் விடுத்தது இருந்தால் என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
Naam Thamizhar katchi Seeman Anna University Harassment case