#BREAKING || நீட் விலக்கு - சட்டப்பேரவையில் இருந்து சற்றுமுன் வெளியேறிய கட்சி.! - Seithipunal
Seithipunal


சென்னை தலைமைச் செயலகத்தில் சட்டப்பேரவை சிறப்பு கூட்டம் இன்று நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது. இதில், நீட் விலக்கு மசோதாவை மீண்டும் நிறைவேற்றும் வகையில் இந்த சட்டப் பேரவை சிறப்பு கூட்டம் நடைபெற்று வருகிறது.

இந்த சட்டப்பேரவைக் கூட்டம் தொடங்கிய உடன் சபாநாயகராகவும் பேசுகையில், "அவசியத்தை உணர்ந்து சட்டமன்ற சிறப்புக் கூட்டத்தில் பங்கேற்ற அனைவருக்கும் நன்றி" என்று கூறினார்.

மேலும் ஆளுநர் அனுப்பிய கடிதத்தை சட்டப்பேரவையில் வாசித்த பின்னர், நீட் விலக்கு கோரும் மசோதாவை அமைச்சர் மா சுப்பிரமணியன் அறிமுகம் செய்து வைக்க உள்ளார் என்று சபாநாயகர் அறிவித்தார்.

இதனை தொடர்ந்து தமிழக நீட் விலக்கு கோரும் மசோதாவை அமைச்சர் சுப்பிரமணியன் அறிமுகம் செய்து வைத்து பேசினார். அப்போது, "12-ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் ஒளிவு மறைவின்றி மருத்துவ படிப்பு சேர்க்கையை தமிழக அரசு நடத்தி வந்தது.

நீட்தேர்வு ஏழை மாணவர்களுக்கு எதிராக உள்ளதால், பெரும்பாலான தமிழக மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்" என்று தெரிவித்தார்.

மேலும், "நீட் விலக்கு சட்ட முன்வடிவை ஆளுநர் திருப்பி அனுப்பியது அரசியலமைப்பு முறைப்படி சரியானது அல்ல, நீட் தேர்வு குறித்த ஆளுநரின் மதிப்பீடுகள் முற்றிலும் தவறானது, ஆளுநரின் கருத்து உயர்மட்ட குழுவை அவமதிப்பது போல் உள்ளது" என்று அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து மசோதா மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது, பாஜக எம்எல்ஏக்கள் எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

NEET ISSUE TN ASSEMBLY TAMILNADU


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->