மனம் விட்டு பேசினோம்... தேசிய நலன் கருதி பாஜக ஆதரவு... அண்ணாமலை சந்திப்புக்கு பின் ஓ.பி.எஸ் பேட்டி..!! - Seithipunal
Seithipunal


சேலம் கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதிலிருந்து தமிழக அரசியல் களத்தில் பரபரப்பு தொற்றிக் கொண்டது. அதிமுகவை பொருத்தவரை எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் போட்டியிடுவதாக அறிவித்துள்ளனர். இந்த நிலையில் கூட்டணிக் கட்சிகளின் ஆதரவு கோரி இரு தரப்பினரும் சந்தித்து வருகின்றனர். தமாகா தலைவர் ஜி.கே.வாசனை இரு தரப்பினரும் சந்தித்து ஆதரவு கோரி இருந்த நிலையில் பழனிசாமி தரப்பினர் புரட்சி பாரதம் கட்சி தலைவர் ஜெகன் மூர்த்தியை சந்தித்து ஆதரவு கோரினர்.

இந்த பேச்சுவார்த்தை முடிவில் பழனிச்சாமி தலைமையிலான அதிமுகவிற்கு முழு ஆதரவு தருவதாக ஜெகன் மூர்த்தி அறிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை கட்சியின் தலைமையகமான கமலாலயத்தில் பழனிச்சாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். இந்த பேச்சுவார்த்தை முடிவில் செய்தியாளர்களை சந்தித்த இபிஎஸ் ஆதரவாளர் ஜெயக்குமார் "பேச்சுவார்த்தை சுமுகமாக முடிந்தது. பாஜகவின் நிலைப்பாட்டை அண்ணாமலை அறிவிப்பார்" என செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தையின் முடிவில் செய்தியாளர்களை சந்தித்த ஓ.பன்னீர்செல்வம் "தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை மரியாதை நிமித்தமாக சந்தித்தேன். எங்களுடைய சந்திப்பு மிகவும் மகிழ்ச்சிகரமாக இருந்தது. மாநில நலன் பற்றியும் மத்திய நலம் பற்றியும் விரிவாக மனம் விட்டு பேசி உள்ளோம். 

ஏற்கனவே காலையில் செய்தியாளர்கள் சந்திப்பில் ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட உள்ளோம் என தெரிவித்தேன். அப்பொழுது ஒரு நிருபர் பாஜக போட்டியிட்டால் உங்கள் நிலை என்ன என கேள்வி எழுப்பினார். தேசிய நலன் கருதி ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பாஜக போட்டியிட முன் வந்தால் உறுதியாக தார்மீக அடிப்படையில் முழுமையாக ஆதரவளிப்போம் என தெரிவித்திருந்தேன். அதே நிலைப்பாட்டில் தான் இப்பொழுதும் இருக்கிறோம்" என செய்தியாளர்கள் சந்திப்பில் பேசி உள்ளார். இதன் மூலம் பாஜக ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பாஜக போட்டிட வாய்ப்புள்ளதாகவே கருதப்படுகிறது. மேலும் தமிழக பாஜக தனது நிலைப்பாட்டை இன்று இரவுக்குள் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

OPS meeting with TN BJP leader Annamalai


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->