#BREAKING :: ஈரோடு கிழக்கில் பாஜக போட்டியிட்டால் ஆதரவு... ஓபிஎஸ் அறிவிப்பு..!! - Seithipunal
Seithipunal


ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினராக இருந்த காங்கிரஸ் கட்சியை சேர்ந்த திருமகன் ஈவேரா கடந்த ஜனவரி 4ம் தேதி காலமானதை அடுத்து சட்டமன்ற தொகுதி காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டது. இதனை அடுத்து மூன்று மாநில பொது தேர்தலுடன் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது. அதன்படி வரும் பிப்ரவரி 27 ஆம் தேதி ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை மன்றத்திற்கான இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.

இந்த நிலையில் பல்வேறு அரசியல் கட்சிகள் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிட தயாராகி வருகின்றனர். திமுக சார்பில் அதன் கூட்டணி கட்சியான காங்கிரஸ் போட்டியிட உள்ளது. கடந்த சட்டமன்ற பொது தேர்தலில் அதிமுக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி போட்டியிட்டது. அதிமுகவின் இபிஎஸ் அணியினர் போட்டியிட விருப்பம் தெரிவித்ததால் விட்டுக் கொடுப்பதாக தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே வாசன் அறிவித்தார். இதன் மூலம் வரும் இடைத்தேர்தலில் அதிமுக சார்பாக இபிஎஸ் அணியினர் போட்டியிட உள்ளனர்.

இந்த நிலையில் இன்று காலை செய்தியாளர்களை சந்தித்த ஓ.பன்னீர்செல்வம் அதிமுக சார்பில் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளார். மேலும் தேர்தல் ஆணையத்தில் இருந்து சின்னம் பெறுவதற்கான கோப்புகளில் கையெழுத்திடவும் தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார். அப்பொழுது செய்தியாளர் ஒருவர் அதிமுக கூட்டணியில் உள்ள பாஜக போட்டியிட்டால் ஆதரவு தருவீர்களா என கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதில் அளித்த ஓ.பன்னீர்செல்வம் "பாஜக போட்டியிட்டால் நாங்கள் ஆதரவு அளிப்போம். கடந்த தேர்தலில் கூட்டணி கட்சிக்கு ஒதுக்கப்பட்ட தொகுதி என்பதால் தேசிய கட்சியான பாஜக போட்டியிட விரும்பினால் முழுமையாக ஆதரவளிப்போம்" என பதில் அளித்துள்ளார். இதன் மூலம் ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுகவின் இபிஎஸ் அணியிலிருந்து பிரிந்து பாஜக தனித்து போட்டியிட்டால் ஓபிஎஸ் தரப்பினர் பாஜகவுக்கு ஆதரவு அளிக்க தயாராக உள்ளனர் என்பது வெட்ட வெளிச்சம் ஆகியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

OPS support if BJP contests in Erode East byelection


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->