ப. சிதம்பரம் உடல்நிலை உப்பு எப்படி இருக்கு? CM ஸ்டாலின் வெளியிட்ட செய்தி!
P Chidambaram health update CM MK Stalin
குஜராத்: அகமதாபாத்தில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில் பங்கேற்ற மத்திய முன்னாள் நிதி அமைச்சர் ப. சிதம்பரம் திடீரென மயக்கமடைந்ததால் நிர்வாகிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில், ப. சிதம்பரம் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அவரின் உடல்நிலை குறித்து முதல் முக ஸ்டாலின் கேட்டறிந்துள்ளார்.
இதுகுறித்து தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், "மத்திய முன்னாள் நிதி அமைச்சரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ப. சிதம்பரம் உடல்நலக் குறைவு காரணமாக அகமதாபாத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் செய்தி அறிந்து,
அவரது மகனும், நாடாளுமன்ற உறுப்பினருமான கார்த்திக் சிதம்பரத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு சிதம்பரம் அவர்களின் உடல்நிலை குறித்து கேட்டறிந்தார்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, என் தந்தை நலமுடன் உள்ளார், மருத்துவர்கள் பரிசோதித்து வருகின்றனர் என கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
English Summary
P Chidambaram health update CM MK Stalin