விஜய்க்கு விழுந்த அடி; பிரசாந்த் கிஷோரை தமிழக மக்கள் மன்னிக்க மாட்டார்கள்; அண்ணாமலை பேட்டி..! - Seithipunal
Seithipunal


''பொய்யாக நாடகம் போட்டு உங்களை நம்பி வரும் த.வெ.க., தொண்டர்களை ஏமாற்றக்கூடாது'' என விஜயை தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். 

கோவையில் நிருபர்களுக்கு அவர் அளித்த பேட்டியளித்த போது அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அத்துடன் அவர் அங்கு பேசுகையில், ''நடிகர் விஜய் நான் கேட்கும் கேள்விக்கு, பதில் சொல்லியாக வேண்டும். உங்கள் குழந்தைக்கு பயிற்றுவிப்பது மூன்று மொழி. நீங்கள் நடத்தும் விஜய் வித்யாஸ்ரம் பள்ளியில், பயிற்றுவிப்பது மூன்று மொழி.

ஆனால், த.வெ.க., தொண்டர்களின் குழந்தைகளுக்கு இரண்டு மொழி. அதை வலியுறுத்திப் பேசுவீர்கள். பொய்யாக நாடகம் போட்டு உங்களை நம்பி வரும் த.வெ.க., தொண்டர்களை ஏமாற்றக்கூடாது.;; என பேசியுள்ளார்.

தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் மும்மொழிக் கொள்கையை எதிர்த்து, கையெழுத்து இயக்கம் ஆரம்பித்துள்ளார். அவருக்கு ஆலோசராக நியமிக்கப்பட்டிருக்கும் பிரஷாந்த் கிஷோரே, விஜய் கொள்கையில் உடன்பட மறுத்து கையெழுத்து இயக்கத்துக்கான பதாகையில் கையெழுத்திட மறுத்துள்ளார். மும்மொழி கொள்கை விவகாரத்தில் விஜய்க்கு விழுந்த முதல் அடியாக இது பார்க்கப்படுகிறது. 

அத்துடன், அண்ணாமலை அவர்கள் பேசு பொது, 'நானும் கிரிக்கெட் வீரர் தோனியை போல், புகழ் பெற வேண்டும்' என்று சொல்லும் பிரசாந்த் கிஷோர், எதற்காக தி.மு.க.,வை ஆட்சியில் அமரச் செய்தார்? அந்த பாவத்துக்காகவே அவரை, தமிழக மக்கள் எப்போதும் மன்னிக்க மாட்டார்கள் என்றும் கூறியுள்ளார்.

மேலும், தேசிய ஜனநாயக கூட்டணிக்கு, ஒருமித்த கருத்தோடு யார் வந்தாலும் அவர்களுடன் பயணிக்க தயாராக இருக்கிறோம்.தேசிய ஜனநாயக கூட்டணியில் யார் முதல்வர் வேட்பாளர் என்பதை தேர்தல் நேரத்தில், பா.ஜ., தலைமை முடிவெடுக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

அத்துடன், வெற்றி பெறுவதற்காக தேர்தல் நேரத்தில் மக்களுக்குக் கொடுக்க, எவர்சில்வர் தட்டு, டம்ளர், பிளாஸ்டிக் பொருட்களை மக்களுக்கு கொடுக்க, அரசியல்வாதிகள் இருப்பு வைத்து வருகின்றனர். அப்படியெல்லாம் பரிசு பொருட்கள் கொடுத்து, இனி மக்களை ஏமாற்ற முடியாது. எட்ன்றும் கோவையில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் அண்ணாமலை அவர்கள் மேலும் குறிப்பிட்டுள்ளார்.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Tamil Nadu people will not forgive Prashant Kishor Annamalai interview


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->