தெலுங்கானா காங்கிரஸ் ஆட்சியின் முதல் ஆண்டில் 223 விவசாயிகள் தற்கொலை! அதிர்ச்சி ரிப்போர்ட்!
Telangana Congress Govt Farmers Death report one year
தெலுங்கானா மற்றும் ஆந்திராவில் ரிது ஸ்வராஜ்ய வேதிகா என்ற அமைப்பு விவசாயிகள் பிரச்சனைகளை குரல் கொடுத்து போராடி வருகிறது.
சமீபத்தில், இவ்வமைப்பு வெளியிட்ட அறிக்கையில், தெலுங்கானா மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சியின் முதல் ஆண்டில் 223 விவசாயிகள் தற்கொலை செய்துள்ளார்களென தகவல் தெரிவித்துள்ளது.
அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில், அறிக்கையில் சித்திப்பேட்டை மாவட்டத்தில் மட்டும் கடந்த 12 மாதங்களில் 22 விவசாயிகள் தற்கொலை செய்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
விவசாயத் துறையை மேம்படுத்துவோம் என வாக்குறுதி அளித்த காங்கிரஸ், அவற்றை நிறைவேற்றத் தவறியதாக வேதிகா குற்றம்சாட்டியுள்ளது.
முக்கியமாக, பயிர்க் காப்பீடு திட்டத்தை செயல்படுத்த முடியாததோடு, குத்தகை விவசாயிகளுக்கு அடையாள அட்டையை வழங்கவும் அரசு தோல்வியடைந்துள்ளது.
கடந்த ஒரு ஆண்டில் மாநிலத்தில் பதிவான மொத்த தற்கொலைகளில் 36 சதவீதம் குத்தகை விவசாயிகள் இருந்தனர்.
100 சதவீத கடன் தள்ளுபடி மற்றும் விவசாயிகளுக்கு வாக்களித்த சலுகைகளை நிறைவேற்றத் தவறியதன் விளைவாகவே விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டதாக அறிக்கை தெரிவிக்கின்றது.
English Summary
Telangana Congress Govt Farmers Death report one year