மத்திய அரசு எவ்வளவு செய்தாலும், மும்மொழி கொள்கை, தொகுதி மறுவரையறை என திசை திருப்பும் முயற்சிகள் நடக்கிறது; நிர்மலா சீதாராமன்..!
There are attempts to divert attention through three language policy and constituency redefinition Nirmala Sitharaman
மத்திய அரசின் 2025-26 நிதிநிலை அறிக்கை குறித்த பொது மக்களுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. இதில் மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அப்போது அவர் நிதிநிலை அறிக்கை குறித்து, மாணவர்கள்,பொது மக்கள் மத்தியில் பேசிய போது கூறியதாவது:
மத்திய அரசு கடந்த 10 ஆண்டுகளில் தமிழ்நாட்டிற்கு பல்வேறு திட்டங்களை வகுத்துள்ளது என்றும், தமிழகத்தில் ஒரு விவாதம் இருந்து வருகிறது அதாவது, தமிழகம் 01 ரூபாய் கொடுத்தால் திருப்பி 07 பைசா கூட வழங்கப்படவில்லை என்ற விவாதமே தவறு என்று குறிப்பிட்டார்.

அத்துடன், தமிழகத்தில் கோவை, சென்னை மாவட்டங்களே வருவாய் அதிகம் வழங்குகிறது என்பதால் மற்ற மாவட்டங்களுக்கு திட்டங்கள் வழங்க கூடாது என கூற முடியாது எனவும் குறிப்பிட்டார்.
மேலும், மத்திய அரசு தமிழத்திற்காக இன்னும் எவ்வளவோ செய்தவதற்கு இருந்தாலும், மும்மொழி கொள்கை, தொகுதி மறுவரையறை என திசை திருப்பும் முயற்சிகள் நடைபெறுவதாகவும், மத்திய அரசு தமிழகத்தின் முன்னேற்றத்துக்காக உழைக்க கட்டுப்பட்டுள்ளோம் என்றும், தான் இங்கு நடக்கும் ஊழல் குறித்து பேச விரும்பவில்லை என்றும் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
English Summary
There are attempts to divert attention through three language policy and constituency redefinition Nirmala Sitharaman