திரிபுரா மாநில சட்டப்பேரவை தேர்தல் நிறைவு.. 81% வாக்கு பதிவு.!
Thiripura assembly election polling end 81 percentage votting
திரிபுரா மாநிலத்தின் 5 ஆண்டுகால பதவிக்காலம் வரும் மார்ச் 22 ஆகிய தேதி முடிவடைகிறது. இதனையடுத்து சட்டப்பேரவை தேர்தலுக்கான அட்டவணையை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டது.
அதன்படி, திரிபுரா மாநிலத்தில் உள்ள 60 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. மேலும், மார்ச் 2-ம் தேதி வாக்குகள் எண்ணப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில், திரிபுரா மாநிலத்தில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சி செய்து வருகிறது. இந்த நிலையில் திரிபுரா மாநிலத்தில் மீண்டும் ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள பாஜக தீவிர பிரச்சாரம் செய்தது.
இந்த நிலையில் இன்று காலை 7 தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 4 மணிக்கு வாக்குப்பதிவு நிறைவு பெற்றது. இதில், மொத்தம் 81.10 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது.
English Summary
Thiripura assembly election polling end 81 percentage votting