இந்தாண்டு நாடாளுமன்றம் அடுத்தாண்டு சட்டமன்றம்; எங்கள் குரல் ஒலிக்கும்; ம.நீ.ம தலைவர் கமல்ஹாசன்..! - Seithipunal
Seithipunal


மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் மற்றும் நடிகர் கமல்ஹாசன் சென்னை ஆழ்வார்பேட்டையில் செய்தியாளர்களை சந்தித்தார். இதன் போது அவர் கூறியதாவது:- நம்மை இணைப்பது தமிழ்மொழி தான். நான் தன்னம்பிக்கையுடன் உயிர்த்திருப்பதற்கு காரணம் தமிழக மக்கள்தான் என்று குறிப்பிட்டார். 

அத்துடன் அவர், ''வானுயர்ந்த தமிழ் மொழியை எவராலும் கீழே இறக்கிவிட முடியாது. 20 ஆண்டுகளுக்கு முன்பே அரசியலுக்கு வந்திருந்தால் இன்று நாம் நின்றிருக்கும் இடமே வேறாக இருந்திருக்கும். எந்த மொழி வேண்டும், எந்த மொழி வேண்டாம் என்பது தமிழர்களுக்கு நன்றாகவே தெரியும்.

இந்தாண்டு நாடாளுமன்றத்தில் நமது குரல் ஒலிக்கும். அடுத்தாண்டு மக்கள் நீதி மய்யத்தின் குரல் சட்டமன்றத்திலும் ஒலிக்கும். மக்கள் நீதி மய்யத் தொண்டர்கள் தங்களை தகுதி உள்ளவர்களை வளர்த்துக்கொள்ள வேண்டும்''. என்று செய்தியாளர்களிடம் அவர் கூறினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

This year our voice will be heard in Parliament and next years Legislative Assembly Kamal Haasan


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->