ஆங்கில புத்தாண்டு - கூகுள் நிறுவனம் சிறப்பு டூடூல் வெளியீடு.!
google publishe new doodle for new year
ஒவ்வொரு வருடமும் ஜனவரி மாதம் 1-ம் தேதி ஆங்கில புத்தாண்டாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் 2024ம் ஆண்டு நிறைவடைந்து 2025ம் ஆண்டு பிறந்துள்ளது. அதிலும் தமிழகம் முழுவதும் இன்று புத்தாண்டு கொண்டாட்டம் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
நாட்டின் தலைநகர் டெல்லி முதல் சென்னை வரை கொண்டாட்டங்களில் மக்கள் மூழ்கினர். சென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் ஆட்டம், பாட்டத்துடன் மக்கள் புத்தாண்டை வரவேற்றனர்.
இந்த நிலையில், இணைய தேடுபொறியில் முதன்மை நிறுவனமான கூகுள் சுதந்திர தினம், குடியரசு தினம் போன்ற முக்கிய நாட்கள், பிரபலங்களின் பிறந்த நாள் மற்றும் பண்டிகை காலங்களில் அதன் தேடுபொறியில் புதிய டூடுலை மாற்றியமைக்கும். தனது டுடூல் அமைப்பை அந்த நாளின் சிறப்புக்கு ஏற்றார் போல் மாற்றி அமைத்து வருகிறது.
அதன் படி 2025-ம் ஆங்கில புத்தாண்டை வரவேற்கும் விதமாக கூகுள் தனது முகப்பு பக்கத்தில் சிறப்பு டூடுல் ஒன்றை வெளியிட்டுள்ளது.
English Summary
google publishe new doodle for new year