ஆடி மாதத்தில் மறந்தும் இதை செய்யாதீர்கள்... ஆன்மீக ரகசியம்.!
Aadi month spiritual benefits in tamil
ஆடி மாதம் வந்தால் விழா காலம் எனலாம். ஆடி பூரம், ஆடிப்பெருக்கு, விநாயகர் சதுர்த்தி, கோகுலஷ்டமி, வரலட்சுமி விரதம், நவராத்திரி, ஆடி அமாவாசை, ஆடி கிருத்திகை போன்ற விழாக்கள் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஆடி வெள்ளியில் அம்மனுக்கு கூழ் ஊற்றி வழிபடுவது நல்லது.
மழை வேண்டி , உடல் நலம் வேண்டி முன்னோர்கள் அம்மனை வழிபடுவது அம்மனுக்கு பிடித்தமானவற்றை வைத்து வழிபடுவது கிராமங்களில் நகரங்களில் ஆடி மாதத்தில் கோவில்களில் அன்னதானம் சிறப்பு வழிபாடு போன்றவை நடைபெறும். ஆடி மாதங்களில் கோவிலுக்கு வரும் பெண்கள் சுமங்கலியாக நீடிக்க தாம்பூலம் கொடுத்து வழிபடுவது போன்றவை ஆடி மாதத்தில் சிறப்பானது.
ஆடி மாதத்தில் இறைவழிபாடு, மந்திர ஜபம் போன்றவற்றை செய்வது மிகவும் சிறப்பானது. ஆடி மாதத்தில் எந்த முறை வேண்டுமானாலும் இறை வழிபாட்டினை செய்யலாம் எப்படி செய்தாலும் தெய்வீக பலன் பல மடங்காக அதிகரிக்கும். ஆடி மாதம் வளர்பிறை நாட்களில் துளசி வழிபாடு செய்வது வீட்டில் செல்வ செழிப்பை அதிகரிக்கும்.
ஆடி மாதம் பித்ருகளுக்கு வழிபாடு செய்ய உகந்த மாதம். அதனால் ஆடி மாதத்தில் நமது முன்னோர்களை நினைத்து விரதம் இருப்பது நல்லது. ஆடி மாதத்தில் குடும்பத்தினருடன் குலதெய்வம் கோவிலுக்கு சென்று பொங்கல் இட்டு நேர்த்திக்கடன் செலுத்தி வழிபடலாம். ஆடி மாதத்தில் அம்மனுக்கு குங்குமம், பால், பன்னீர், தேன் போன்றவற்றில் அர்ச்சனை செய்யலாம். கோவிலுக்கு வரும் சுமங்கலி பின் பெண்களுக்கு ஆடி மாதத்தில் தாம்பூலம் கொடுப்பது நல்லது.
ஆடி மாதத்தில் நிச்சயதார்த்தம், திருமணம், பெண்பார்க்குவது போன்றவற்றை தவிர்க்க வேண்டும். ஆடி மாதத்தில் மொட்டை அடிக்க கூடாது . இந்த மாதத்தில் பலத்த காற்று மழை பெய்யும் என்பதால் கிரகப்பிரவேசம் செய்யக்கூடாது. ஆடி மாதத்தில் திருமணம், நிச்சயதார்த்தம் போன்ற சுப நிகழ்ச்சிகள் நடத்தக்கூடாது. திருமணம் முடிந்த கையோடு மணமக்களை தனித்தனியாக பிரிக்க வேண்டி இருக்குமோ என்ற காரணத்தால் ஆடி மாதத்தில் திருமணங்கள் செய்யக்கூடாது என முன்னோர்கள் தெரிவித்துள்ளனர். ஆடி மாதத்தில் வீடு வாங்கவோ வீடு குடியேறவோ கூடாது.
English Summary
Aadi month spiritual benefits in tamil