குலதெய்வ அருளை பெற்றுத்தரும் கருங்காலி கட்டை.. வியாபார விருத்தி தரும் கருங்காலி வேல்.!
Benefits of karungali kattai and vel
கருங்காலி கட்டை :
குலதெய்வம் மற்றும் முன்னோர்களின் அருளை பெற்றிடவும், குலதெய்வம் தெரியாமல் இருப்பவர்களுக்கும் அற்புத சக்தி வாய்ந்த ஒரு வரப்பிரசாதம் கருங்காலி கட்டை.
அமாவாசை முன்னோர்களை வழிபட உகந்த நாளாகும். அமாவாசை தினத்தில், கருங்காலி கட்டையை வைத்து வழிபட்டு முன்னோர்களின் ஆசியையும், குலதெய்வத்தின் அருளையும் பெற்றிடுங்கள்.
பூஜை செய்யும் முறை :
அதீத சக்தி பெற்ற கருங்காலி கட்டை ஒன்றை வீட்டில் வைத்து பசும்பாலால் சுத்தம் செய்து, கட்டையின் மேற்புறத்தில் சந்தனம், குங்குமம் மூன்று முறை அருகருகே இட்டு கொள்ள வேண்டும்.
அதன்பின் நாணயம் மூன்றை எடுத்து குங்குமம் இட்ட இடத்தில் வைத்து, மலர் மாலை ஒன்றை சாற்றி பின்னர் தூப, தீபம் காட்டும் போது குலதெய்வத்தின் மகிமை கருங்காலி கட்டையினுள் இறங்கும்.
கருங்காலி கட்டையை ஒருவர் சரியாக வழிபட்டு வந்தால் வேண்டிய வரம் கிட்டும். நீங்கள் எந்த பிரச்சனைகளில் இருந்தாலும் அவற்றிலிருந்து நிவாரணம் கிடைக்கக்கூடிய வழியை குலதெய்வம் நிச்சயம் காட்டும். குலதெய்வம் தெரியாதவர்கள் கூட இந்த வழிபாட்டை மேற்கொள்வதன் மூலம் வேண்டிய வரம் பெறலாம்.
கருங்காலி கட்டை வேல் :
கருங்காலி, செவ்வாய் கிரகத்திற்கு உரிய மரம். முருகப்பெருமான் செவ்வாய் கிரகத்திற்கு அதிபதி ஆவார். செவ்வாய்க்கிழமை முருகனுக்குரிய தினமாகும். பொதுவாகவே செவ்வாய்க்கும், முருகப்பெருமானுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. ஆகையால் செவ்வாய்க்குரிய கருங்காலியால் ஆன வேலை கொண்டு முருகப்பெருமானை வழிபடுவது மிகவும் விசேஷம்.
கருங்காலி வேல், பகைவர்களை எல்லாம் வெல்லக்கூடியது.
மேலும், பில்லி, சூன்யம் போன்ற துஷ்ட சக்திகளை விரட்டக்கூடியது.
ஞானத்தை வழங்கக்கூடியது வேல்.
வியாபாரத்தில் அபிவிருத்தி உண்டாகும்.
செவ்வாய் தோஷத்தை நீக்கும்.
கருங்காலி வேலை வீட்டில் வைத்து வழிபடுவதால் முருகப்பெருமானின் அருளை எளிதாக பெறலாம்.
English Summary
Benefits of karungali kattai and vel