முடிவடையும் ஆடி மாதத்தில் இதையெல்லாம் செய்தீர்களா? - Seithipunal
Seithipunal


அம்மனுக்கு உகந்த மாதமான ஆடி மாதத்தில் எந்தெந்த காரியங்களை செய்யலாம், எந்தெந்த காரியங்களை செய்யக் கூடாது என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். 

முதலில் ஆடி மாதத்தில் எந்தெந்த காரியங்களை செய்யக் கூடாது என்பதைக் கம்போம்:

* திருமணம், நிச்சயதார்த்தம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகள் நடத்தக் கூடாது.

* புது வீடு குடி புகுதல், கிரகப்பிரவேசம் போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.

* கர்ப்பிணிப் பெண்களுக்கு வளைகாப்பு நடத்தக் கூடாது.

* ஆடி மாதத்தில் குழந்தைகளுக்கு மொட்டை அடிக்கக் கூடாது.

* ஆடி மாதத்தில் பெண் பார்க்க செல்வதை தவிர்க்க வேண்டும்.

ஆடி மாதத்தில் செய்ய வேண்டியவை என்னென்ன ?

* கோவிலில் நேர்த்திக்கடன், வழிபாடு ஆகியவற்றை செய்யலாம்.

* திருமணமான பெண்கள் தாலி சரடு மாற்றிக் கொள்ளலாம்.

* மந்திர ஜபம், யாகம், ஹோமம் ஆகியவற்றை செய்யலாம்.

* ஆடி மாதத்தில் வீடு கட்டுமான பணிகளை துவங்கலாம்.

* ஆடிப்பெருக்கு அன்று புது வீடு வாங்கவோ, நிலம் வாங்கவோ முன்பணம் கொடுக்கலாம்.

* குடும்பத்தில் நோய் நொடிகள் நெருங்காமல் இருக்க பெண்கள் ஆடி மாதத்தில் தினமும் விளக்கேற்றி வழிபட வேண்டும்.

* ஆடி மாதத்தில் எந்த மந்திரத்தை ஜபித்தாலும் அது வருடம் முழுவதும் ஜபித்த பலனை கொடுக்கும்.

* ஆடி மாதத்தில் விரதம் இருந்தால் வருடம் முழுவதும் சுபமான வாழ்க்கை அமையும். வருடம் முழுவதும் விரதம் இருந்து வழிபட்ட பலனைத் தரும்.

* திருவிளக்கு பூஜை நடத்துவது, விளக்கு பூஜையில் கலந்து கொள்வதும் சிறப்பு.

* சுமங்கலி பெண்களுக்கும், கன்னிப் பெண்களுக்கும் தாம்பூலம் வழங்குவது குடும்பத்திற்கு நல்லது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

how to do in aadi month


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->