விருச்சிகம் ராசியினர்; பதுங்கிப் பின்பு பாயும் புலியைப் போன்றவர்கள் இவர்கள்..!
scorpio zodiac character traits
12 ராசிகளில் 08 வது ராசி விருச்சிகம். ராசியின் அதிபதி செவ்வாய் பகவான். இந்த விருச்சிக ராசியில் பிறந்தவர்கள் எத்தனை கஷ்டங்கள் வந்தாலும், உங்களை நீங்களே தேற்றிக் கொள்ள கூடியவர்கள். எதையும் விடாப்பிடியாகப் பிடித்துக்கொண்டிருப்பதோடு, பதுங்கிப் பின்பு பாயும் புலியைப் போன்றவர்கள்.
செவ்வாய் ராசி அதிபதியாக வருவதால் உங்களுக்கு உங்கள் பெயரில் சிறிய அளவிலாவது சொத்து எப்போதும் இருக்கும். இந்த ராசியினர் சிலருக்கு இரும்புச் சத்துக் குறைபாடு இருக்கும். அத்துடன், உங்கள் ராசிக்கு ருண, ரோக, சத்ரு ஸ்தானமான 06-ம் இடத்துக்கு அதிபதி செவ்வாய். இதனால், பலருக்கு ரத்த அழுத்தம், முடி உதிர்தல் போன்ற பிரச்னைகள் ஏற்படும்.

விருச்சிக ராசியினரை பொறுத்தவரை உங்களுடைய பேச்சே உங்களுக்கு எதிரி என்று சொல்லலாம். 02-ஆம் இடமான தனம், வாக்கு, குடும்ப ஸ்தானத்துக்கு அதிபதி குரு. உங்கள் வாழ்க்கையின் பிற்பகுதியில் பணவரவு, சேமிப்பு போன்றவை உண்டு.
உங்கள் வாழ்க்கைத் துணையைப் பற்றிச் சொல்லும் 07-ஆம் இடத்துக்கு அதிபதி சுக்கிரன். ஆக உங்களுடைய வாழ்க்கைத் துணைவர் ஏதேனும் ஒரு வகையில் பிரபலமாக இருப்பார். அவர் கலைகளில் மிகவும் ஆர்வத்துடன் இருப்பார். அதனுடன், உங்களிடம் மிகுந்த அன்போடும், ஒரு நண்பரைப்போல் பழகுவார்.

ராசியில் சயன ஸ்தானம் என்னும் 12-ஆம் இடத்துக்கும் சுக்கிரனே அதிபதி. இதனால் நெனெகல் நான்கு நாட்கள் வேலை செய்தால் இரண்டு நாட்கள் சுகமாக இருக்க விரும்புவீர்கள். அடிக்கடி வெளியூர்களுக்குச் சென்று வருவீர்கள். பயணங்களை விரும்பும் நீங்கள் அதற்காகவே பணம் சேமிக்க கூடியவர்கள் நீங்கள்.
உங்கள் ராசிக்கு அதிபதியாக செவ்வாய் என்பதால், ஞானியர்களையும், மகான்களையும் தரிசித்து வணங்குவது மிகவும் நல்லது. அத்துடன், செவ்வாய்க்கு எதிர் குணங்களைக் கொண்ட அனுஷத்துக்கு அதிபதியாக சனியும், கேட்டைக்கு அதிபதியான புதனும் வருவதால், நன்றாக சுகபோகங்களுடன் வாழும்போதே வாழ்க்கையின் நிலையாமை குறித்தும் சிந்திப்பீர்கள்.

உங்கள் ராசிக்கு காடுகளிலும் மலைப்பகுதிகளிலும் சுற்றித் திரியும் சித்தர்கள் வழிபாடு நல்லது. மிகப் பழைமையான தலங்களையும், அங்கிருக்கும் சித்தர்களின் ஜீவ சமாதிகளையும் தரிசித்து வழிபடுவது நல்லது. அப்படி ஜீவசமாதி அமைந்திருக்கும் தலம்தான் நெரூர். இந்தத் தலத்தில் உள்ள சிவாலயத்துக்குப் பின்புறம்தான் சதாசிவ பிரம்மேந்திரர் என்னும் மகாஞானியின் ஜீவ சமாதி அமைந்துள்ளது.இங்கு சென்று வர உங்களுக்கு தொட்டது துலங்கும்.
English Summary
scorpio zodiac character traits