இந்திய அணிக்கு எதிரான ஒருநாள் தொடர்.. வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 2 டெஸ்ட் போட்டிகள், 3 ஒரு நாள் போட்டிகள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.

இந்த தொடருக்கான இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டிகளுக்கு ரோகித் சர்மா தலைமையிலான அணியும், டி20 தொடருக்கு ஹர்திக் பாண்டியா தலைமையிலான அணியும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில், இதில் முதலில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது. அதனைத் தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டி மழை காரணமாக டிராவில் முடிந்தது. இதன் மூலம் 1-0 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரை இந்திய அணி கைப்பற்றியது.

அதனைத் தொடர்ந்து இரு அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் நடைபெற உள்ளது. அதன்படி இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி வரும் ஜூலை 27ஆம் தேதி நடைபெற உள்ளது.

இந்த நிலையில் இந்திய அணிக்கு எதிரான ஒரு நாள் தொடருக்கான வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஷாய் கோப் தலைமையிலான 15 வீரர்களைக் கொண்ட வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒருநாள் தொடருக்கான அணி விவரம்

இந்திய அணி

ரோஹித் சர்மா (கேப்டன்), சுப்மான் கில், ருதுராஜ் கெய்க்வாட், விராட் கோலி, சூர்ய குமார் யாதவ், சஞ்சு சாம்சன் (wk), இஷான் கிஷன் (wk), ஹர்திக் பாண்டியா (VC), ஷர்துல் தாக்கூர், R ஜடேஜா, அக்சர் படேல்,  யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ், ஜெய்தேவ் உனத்கட், முகமது.  சிராஜ், உம்ரான் மாலிக், முகேஷ் குமார்.

வெஸ்ட் இண்டீஸ் அணி

ஷாய் ஹோப் (கே), ரோவ்மேன் பவல் (து.கே), அலிக் அதானாஸ், யானிக் கரியா, கீசி கார்டி, டொமினிக் டிரேக்ஸ், ஷிம்ரோன் ஹெட்மியர், அல்ஸாரி ஜோசப், பிராண்டன் கிங், கைல் மேயர்ஸ், குடாகேஷ் மோட்டி, ஜெய்டன் சீல்ஸ், ரொமாரியோ ஷெப்பர்ட், கெவின் தாமஸ், ஓஷேன் தாமஸ்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

2023 IND vs WI odi squad


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->