வெற்றியுடன் தொடங்குமா இந்திய அணி.? இன்று இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் முதல் ஒருநாள் போட்டி.!
2023 WI vs IND 1St odi match today
இந்தியா வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி இன்று இரவு நடைபெறுகிறது.
வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 2 டெஸ்ட் போட்டிகள், 3 ஒரு நாள் போட்டிகள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.
இதில், முதலில் நடைபெற்ற டெஸ்ட் தொடரை 1-0 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றியது. அதனைத் தொடர்ந்து இரு அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் நடைபெற உள்ளது.
அதன்படி இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி இன்று (ஜூலை 27ஆம் தேதி) இரவு 7 மணிக்கு கென்னிங்கடன் ஓவல் மைதானத்தில் நடைபெற உள்ளது.
இந்திய அணி ஒரு நாள் உலகக் கோப்பை தொடருக்கு தயாராகும் வகையில் விளையாடி வருகிறது. அதன் காரணமாக இந்திய அணிக்கு இந்த தொடர் மிகவும் முக்கியம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. அதனால் இந்த தொடரை வெற்றி பெற இந்திய அணி முனைப்பு காட்டும்.
வெஸ்ட் இண்டீஸ் அணி உலகக் கோப்பை தொடருக்கு தகுதி பெறவில்லை என்றாலும் கூட, சொந்த மண்ணில் வெற்றி பெற முனைப்பு காட்டும் என்பதால் இன்றைய போட்டி விறுவிறுப்பாக அமையும் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.
நேரடி ஒளிபரப்பு
இந்தியா வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான ஒரு நாள் தொடரை பேன் கோட் மற்றும் ஜியோ சினிமா செயலியில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
இதுவரை நேருக்கு நேர்
இதுவரை இவ்விர அணிகளும் 139 கோடிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் இந்திய அணி 70 போட்டிகளிலும், வெஸ்ட் இண்டீஸ் அணி 63 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. மேலும், 2 போட்டிகள் சமனில் முடிந்துள்ளது. 4 நான்கு போட்டிகளில் முடிவில்லை.
எதிர்பார்க்கப்படும் அணி
வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர்கள்
பிராண்டன் கிங், கைல் மேயர்ஸ், கீசி கார்டி, ஷாய் ஹோப் (C & wk), ஷிம்ரோன் ஹெட்மியர், ரோவ்மேன் பவல், ரொமாரியோ ஷெப்பர்ட், கெவின் சின்க்ளேர், அல்ஸாரி ஜோசப், ஓஷேன் தாமஸ், ஜெய்டன் சீல்ஸ்/யானிக் கரியா
இந்திய அணி வீரர்கள்
ரோஹித் சர்மா (c), ஷுப்மான் கில், விராட் கோலி, இஷான் கிஷன்/சஞ்சு சாம்சன் (w.k), ஹர்திக் பாண்டியா, சூர்யகுமார் யாதவ், ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், உம்ரான் மாலிக், முகமது சிராஜ், ஜெய்தேவ் உனத்கட்/முகேஷ் குமார்.
English Summary
2023 WI vs IND 1St odi match today