ஆஷஸ் கோப்பையை வென்றது ஆஸ்திரேலியா.! இங்கிலாந்து அணி அதிர்ச்சி தோல்வி.!!
australia win the ashes test
ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடரில் விளையாடி வருகிறது. காபாவில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் தோற்றது நிலையில், அடுத்து இரண்டாவது டெஸ்டில் 275 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது.
இந்நிலையில் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் நிச்சயம் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் இங்கிலாந்து அணி தள்ளப்பட்டது. மூன்றாவது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. முதல் இன்னிங்ஸ் களமிறங்கிய இங்கிலாந்து அணி அணியில் ஜோ ரூட் மட்டுமே ஓரளவுக்கு தாக்கு பிடித்து 50 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு விளையாடவில்லை. இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 185 /10 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இதையடுத்து முதல் இன்னிங்சில் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 267/10 ரன்கள் சேர்த்தது/ 82 ரன்கள் பின்தங்கிய நிலையில், 2-வது இன்னிங்சில் களமிறங்கிய இங்கிலாந்து அணி சிறப்பாக விளையாடி 100 ரன்களையாவது இலக்காக நிர்ணயிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், வெறும் 68 ரன்கள் எடுத்து இன்னிங்ஸ் மற்றும் 14 ரன் வித்தியாசத்தில் தோற்றது. அதிகபட்சமாக ரூட் 28 ரன்களை எடுத்தார். இந்த தோல்வியின் மூலம் ஆஸ்திரேலிய அணி 3-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.
English Summary
australia win the ashes test