ஒரே ஒரு தொடர் தான்! இந்திய அணியின் வெறித்தனமான சாதனை! ஜாம்பவான் சச்சினின் சாதனை தகர்ப்பு!
IND vs Wi 2023 new records
வெஸ்ட் இண்டீஸ் - இந்தியா அணிகளுக்கு இடையேயான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் ஆட்டத்தில் இந்திய அணியும் வீரர்களும் பல்வேறு சாதனைகளை பதிவு செய்துள்ளனர்.
இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கி பேட்டிங் செய்த இந்திய அணி 5 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 351 ரன்கள் எடுத்தது.
இதனையடுத்து களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர்கள் அடுத்தடுத்து தங்களது விக்கெட்களை பறிகொடுத்தார்.
இறுதியில் 35.3 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 151 ரன்கள் மட்டுமே எடுத்து வெஸ்ட் இண்டீஸ் படுதோல்வியை சந்தித்தது.
200 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளது. வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக அதிக ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை பதிவு செய்த அணி என்ற பெருமையை இந்திய அணி பெற்றுள்ளது.
கடந்த 2019 ஒருநாள் உலக கோப்பை தொடரில் இந்திய அணியிடம் வெஸ்ட் இண்டீஸ் அணி 125 ரங்களில் தோல்வியடைந்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக தொடர்ச்சியாக 13 ஒருநாள் தொடர்களை இந்திய அணி கைப்பற்றி மற்றொரு சாதனையை படைத்துள்ளது.
கடைசியாக 2006-ம் ஆண்டு பிரைன் லாரா தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணி 4-0 என்ற கணக்கில் இந்திய அணியை வீழ்த்தி இருந்தது குறிப்பிடதக்கது.
மேலும், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இந்த ஆட்டத்தில் தொடக்க ஆட்டக்காரர் இஷான் கிஷன் தொடர் நாயகன் விருதை தட்டிச் சென்றது மட்டுமில்லாம, இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவனான சச்சின் டெண்டுல்கரின் சாதனையை இஷான் கிஷன் முறியடித்து வரலாறு படைத்துள்ளார்.
1989-ல் பாகிஸ்தானுக்கு எதிராக ஆட்டத்தில் அறிமுகமான சச்சின் டெண்டுல்கர், தனது முதல் ஐந்து ஆட்டங்களில் 321 ரன்களைக் குவித்து இருந்தார்.
தற்போது அந்த சாதனையை இஷான் கிஷன் தனது முதல் 5 ஆட்டங்களில் 348 ரன்கள் குவித்து, சச்சினை பின்னுக்கு தள்ளி முதல் இடத்தை பிடித்துள்ளார். இந்த பட்டியலில் மேலும் ஒரு சிறப்பாக சுப்மன் கில் 320 ரன்களுடன் 3-வது இடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
IND vs Wi 2023 new records