ஜடேஜாவின் சாதனை! இந்திய அணியின் வேதனை! தொடங்கிய இடத்துக்கே வந்த ரோகித் ஷர்மா!
IND vs WI First one day match review 2023
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதலாவது ஒருநாள் ஆட்டத்தில் இந்திய அணி தடுமாறி, தடம் மாறி, போராடி ஒரு வெற்றியை பதிவு செய்துள்ளது.
முதலில் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி 23 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 114 ரன் எடுத்தது. இதையடுத்து 115 ரன் வெற்றி இலக்குடன் களம் இறங்கிய இந்திய அணி 22.5 ஓவர்களில் 5 விக்கெட்டை பறிகொடுத்து 118 ரன் எடுத்து வெற்றி பெற்றது.
சோதனை & வேதனை :
ஆட்டம் நடைபெற்ற இந்த மைதானம் அவ்வளவு கடுமையான மைதானமா? இல்லை இந்திய வீரர்கள் தடுமாறி இந்த வெற்றியை பெற்றுள்ளார்களா என்று விவாதம் சமூக வலைத்தளங்களில் எழுந்துள்ளது.
மேலும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இந்த ஒரு நாள் தொடர் உலகக் கோப்பை தொடருக்காக இந்திய அணி வீரர்களை தேர்வு செய்ய நடக்கும் பரிசோதனை முயற்சி என்று, இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா ஆட்டத்திற்கு பிறகு பேட்டி அளித்துள்ளார் மேலும் அனைவருக்கும் வாய்ப்பு அளிக்கப்படும் என்ற ஒரு வாக்குறுதியையும் ரோகித் சர்மா தெரிவித்துள்ளார்.
அப்படி என்றால் விராட் கோலி, ரோகித் சர்மா ஏன் இந்த தொடரில் விளையாட வேண்டும் என்ற கேள்வியை ரசிகர்கள் முன்வைக்கின்றனர்.
கடந்த ஆட்டங்களில் சரியாக ஆடாத சூரியகுமார், ஷுப்மன் கில், பரிதாப நிலையில் இருக்கும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராகவும் ரன் சேர்க்க முடியாமல் தவிக்கின்றனர்.
இவர்களுக்கு ஏன் மீண்டும் மீண்டும் வாய்ப்பு வழங்கப்படுகிறது? இவர்கள் தான் பலம்வாய்ந்த இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சை அடித்து நொறுக்கி உலக்கோப்பையை பெற்று தருவார்கள் என்று, இந்திய அணியின் நிர்வாகம் ஏற்கனவே முடிவு செய்துவிட்டதா?
இவர்களுக்கு பதிலாக ஒருமுறை சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு கொடுத்தால் என்ன? அனைவருக்கு வாய்ப்பு என்ற வீதியில் சஞ்சு சாம்சனுக்கு இடம் இல்லை என்கிறாரா ரோகித் ஷர்மா?
இப்படித்தான் 2019 உலகக் கோப்பையில் அம்பத்தி ராயுடுக்கு பதிலாக, அனுபவம் இல்லாத ‘ஆல்ரவுண்டர்’ விஜய் சங்கர் தேர்வு செய்யப்பட்டு, '3டி வீரர்' என்று அவரை தேர்வுக்குழு தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத் விமர்சனம் செய்து, அதற்க்கு ராயுடு சிரிக்க, இந்திய ரசிகர்கள் சிரிக்க, கடைசியில் உலக கோப்பையும் சிரித்தது.
இந்த உலக கோப்பைக்கு சூர்யா குமார் யாதவ், கில் போன்றவர்களை அனுப்பி சிரிக்கவைக்க இந்திய அணியின் நிர்வாகம் முடிவு செய்து விட்டதோ? என்று, ரசிகர்கள் கடுமையான வார்த்தைகளால் சமூகவலைத்தளங்களில் விமர்சித்து வருகின்றனர்.
English Summary
IND vs WI First one day match review 2023