ஐ.பி.எல். 2025: அட்டவணை வெளியீடு; சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முழு போட்டி அட்டவணை விபரம் உள்ளே..!
IPL 2025 Chennai Super Kings teams full match schedule details inside
18-வது ஐ.பி.எல் சீசன் எதிர்வரும் மார்ச் மாதம் ஆரம்பிக்கவுள்ளது. 10 அணிகள் கலந்து கொள்ளும் இந்த தொடருக்கான வீரர்களின் மெகா ஏலம், சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரில் கடந்த வருடம் நடைபெற்றது. இந்த ஏலத்தில் 577 வீரர்கள் பங்கேற்றனர். இதில் 62 வெளிநாட்டவர் உள்பட 182 வீரர்கள் ரூ.639.15 கோடிக்கு விற்கப்பட்டனர்.
இந்த தொடருக்கான அட்டவணை அதிகாரபூர்வமாக வெளியிடப்படாவிட்டாலும் அடுத்த மாதம் (மார்ச்) 21-ந்தேதி தொடங்கும் என்று பி.சி.சி.ஐ. துணை தலைவர் ராஜீவ் சுக்லா அறிவித்திருந்தார்.

https://www.iplt20.com/news/4114/bcci-announces-schedule-for-tata-ipl-2025
இந்நிலையில் மார்ச் 22-ஆம் தேதி 18-வது சீசன் ஐ.பி.எல். தொடரின் தொடங்கும் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் கொல்கத்தா ஈடன் கார்டனில் இரவு 07.30 மணிக்கு நடக்கும் தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, பெங்களூரு ராயல் சேலஞ்சர்சை எதிர்கொள்கிறது.
இதில் முன்னாள் சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது முதலாவது ஆட்டத்தில் மார்ச் 23-ந்தேதி சேப்பாக்கத்தில் மும்பை இந்தியன்ஸ் உடன் பலப்பரீட்சை நடத்தவுள்ளது.
குவாலிபயர் 01 - மே 20-ஆம் தேதி
எலிமினேட்டர் மே- 21-ஆ ம் தேதி
ஐதராபாத்தில் நடைபெற உள்ளன.
குவாலிபயர் 02- மே 23-ஆம் தேதி
இறுதிப்போட்டி மே-25-ஆம் தேதி
கொல்கத்தாவில் நடைபெற உள்ளன.
மொத்தம் 74 ஆட்டங்கள் 13 மைதானங்களில் நடைபெற உள்ளன.
இந்த தொடரில் 05 முறை சாம்பியன் பட்டம் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் தனது முதல் ஆட்டத்தில் பலம் வாய்ந்த மும்பை இந்தியன்ஸ் அணியை மார்ச் 23-ஆம் தேதி எதிர்கொள்கிறது.
https://x.com/ChennaiIPL/status/1891107474788270411/photo/1
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முழு போட்டி அட்டவணை:-
1. மார்ச் 23: சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ், சென்னை
2. மார்ச் 28: சென்னை சூப்பர் கிங்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, சென்னை
3. மார்ச் 30: ராஜஸ்தான் ராயல்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ், கவுகாத்தி
4. ஏப்ரல் 5: சென்னை சூப்பர் கிங்ஸ் - டெல்லி கேப்பிடல்ஸ், சென்னை
5. ஏப்ரல் 8: பஞ்சாப் கிங்ஸ் -சென்னை சூப்பர் கிங்ஸ், சண்டிகர்
6. ஏப்ரல் 11: சென்னை சூப்பர் கிங்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சென்னை
7. ஏப்ரல் 14: லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ், லக்னோ
8. ஏப்ரல் 20: மும்பை இந்தியன்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை
9. ஏப்ரல் 25: சென்னை சூப்பர் கிங்ஸ் - சன் ரைசர்ஸ் ஐதராபாத், சென்னை
10. ஏப்ரல் 30 சென்னை சூப்பர் கிங்ஸ் - பஞ்சாப் கிங்ஸ், சென்னை
11. மே 3: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - சென்னை சூப்பர் கிங்ஸ், பெங்களூரு
12. மே 7: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா
13. மே 12: சென்னை சூப்பர் கிங்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ், சென்னை
14. மே 18: குஜராத் டைட்டன்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ், அகமதாபாத்

English Summary
IPL 2025 Chennai Super Kings teams full match schedule details inside