ஒரு கேட்ச்! என் கேரியர் குளோஸ்! முச்சதம்! விராட் மீதான பழி சொல்! தோனி பவுலிங், 688 ரன், அந்த ஒரு மேட்ச்!
Virat Kohli Catch Drop brendon McCullum wicket 302 IND vs NZ Dhoni Bowling
கடந்த 2014 ஆம் ஆண்டு, பிப்ரவரி மாதம் நியூஸிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய கிரிக்கெட் அணி, விளையாடிய டெஸ்ட் ஆட்டத்தில், நியூசிலாந்து அணியின் கேப்டன் பிரெண்டன் மெக்கல்லம் கொடுத்த கேட்சை, விராத் கோலி தவறவிட்டார்.
இந்த கேட்ச் குறித்து இஷாந்த் சர்மா ஒன்று சொல்ல, அது காட்டு தீயாய் பரவி, சம்மந்தப்பட்ட ஜாகிர்கான் விளக்கம் கொடுக்கும் அளவிற்கு வந்துள்ளது இந்த விவகாரம்.
சர்ச்சைக்கு உள்ளான இந்த டெஸ்ட் ஆட்டத்தில், டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்து வீச முடிவு செய்தது. அதன்படி களமிறனாகிய நியூசிலாந்து அணி தனது முதல் இன்னிங்சில் 192 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது.
அடுத்து தனது முதல் இன்னிங்ஸ் ஆடிய இந்திய அணி அனைத்து விக்கட்டுகளையும் இழந்து 438 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக ரஹானே 118 ரன்களும், தவான் 98 ரன்களும், கேப்டன் தோனி 68 ரன்னும் எடுத்தார்.
இதனை அடுத்து இரண்டாவது இன்னிங்ஸை ஆடிய நியூசிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள்
ஜாகிர் கான் பந்து வீச்சில் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர்.
ஐந்தாவது பேட்ஸ்மேனாக களமிறங்கிய நியூசிலாந்து அணியின் கேப்டன் பிரெண்டன் மெக்கல்லமும் லட்டு போல ஒரு கேட்ச் கொடுத்திருந்தார்.
ஆனால் விராட் கோலி அதனை கோட்டை விட்டார். அப்போது பிரெண்டன் மெக்கல்லம் வெறும் 14 ரன்னுக்கு கீழ் தான் இருந்தார்.
அந்த கேட்சுக்கு பின் உயிர்பிழைத்து ஆடிய பிரெண்டன் மெக்கல்லம், ஐந்தாவது நாளில் தனது முச்சதத்தை போர்த்தி செய்து, 302 ரன்னில் ஜாகீர்கான் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். நியூசிலாந்து அணி தனது இரண்டாவது இன்னிங்கிஸில் 688 ரன்களை குவித்தது.
இந்த நிலையில், பிரெண்டன் மெக்கல்லம் கேட்ச் குறித்து, தனியார் டிஜிட்டல் ஊடகம் கொண்டிருக்கு பேட்டி அளித்துள்ள இஷாந்த் சர்மா, “அந்த ஆட்டம் எனக்கு நல்லாவே நினைவிருக்கு. உணவு இடைவேளையின்போது, விராட் கோலி நேராக வந்து ஜாகீர் கானிடம் கேட்ச் விட்டதற்காக மன்னிப்புக் கேட்டார்.
அதற்கு ஜாகீர் கானோ, ‘கவலைப்படாதே, லஞ்ச் முடிந்து அவரை அவுட் செய்து விடலாம்’ என்றார். மறுநாள், மெக்கல்லாம் 300 அடித்த பிறகுவிராட் கோலி மீண்டும் ஒருமுறை ஜாகீர் கானிடம் மன்னிப்பு கேட்டார்.
அதற்கு ஜாகீர் கான், ‘என் கிரிக்கெட் வாழ்க்கையையே முடிவுக்குக் கொண்டு வந்துவிட்டாய்” என்று சொன்னதாக இஷாந்த் சர்மா தெரிவித்திருந்தார்.
இஷாந்த் ஷர்மாவின் இந்த பேட்டி காட்டு தீயாய் பரவவே, நான் அப்படிச் சொல்லவில்லை என்று ஜாகீர் கான் மறுப்பு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்த அவரின் விளக்கத்தில், "என் கரியரை முடித்துவிட்டாய் என்று விராட் கோலியிடம் நான் சொல்லவில்லை.
நான் சொன்னது, 'ஒருமுறை விக்கெட் கீப்பர் கிரன் மோரே கேட்சை தவற விட்டார். அன்று கிரகாம் கூச் முச்சதம் விளாசினார். இன்று விராட் கோலி கேட்சை விட்டார் மெக்கல்லம் 300 அடித்து விட்டார்' என்று சொன்னேன்.
அதற்கு விராட் கோலி, 'தயவு செய்து அப்படி சொல்லாதீர்கள்' என்றார்.
நான் விராட் கோலி கேட்சை விட்டார் மெக்கல்லம் 300 அடித்து விட்டார் என்று சொன்னது விராட் கோலியை வருத்தப்பட வைத்தது தான் உண்மை என்றார் ஜாகீர் கான்.
English Summary
Virat Kohli Catch Drop brendon McCullum wicket 302 IND vs NZ Dhoni Bowling