தொடரை வெல்லுமா இந்தியா? வெஸ்ட்இண்டீஸ் அணியுடன் இன்று 2வது ஒருநாள் போட்டி.! - Seithipunal
Seithipunal


இந்தியா வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான 2வது ஒருநாள் போட்டி இன்று இரவு நடைபெறுகிறது.

வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 2 டெஸ்ட் போட்டிகள், 3 ஒரு நாள் போட்டிகள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.

இதில், முதலில் நடைபெற்ற டெஸ்ட் தொடரை 1-0 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றியது. அதனைத் தொடர்ந்து இரு அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது.

இதில் நேற்று முன்தினம் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வைக்கிறது.

இந்த நிலையில் இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான 2வது ஒருநாள் போட்டி  இன்று இரவு 7 மணிக்கு பர்படாஸில் உள்ள கென்னிங்கடன் ஓவல் மைதானத்தில் நடைபெற உள்ளது.

இந்திய அணி ஒரு நாள் உலகக் கோப்பை தொடருக்கு தயாராகும் வகையில் விளையாடி வருகிறது. அதன் காரணமாக இந்திய அணியை சோதிக்கும் வகையில் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டு வருகிறது. மேலும், இன்றைய போட்டியில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்ற இந்திய அணி முனைப்பு காட்டும் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.

வெஸ்ட் இண்டீஸ் அணியை பொறுத்தவரை உலகக்கோப்பை தொடருக்கு முன்னேறாததால், தற்போது இளம் வீரர்களை வைத்து புதிய அணியை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. அதேபோல் சொந்த மண்ணில் தொடரை கைப்பற்ற கடுமையாக போராடும் என்பதால் இன்றைய போட்டி விறுவிறுப்பாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுவரை நேருக்கு நேர்

இதுவரை இவ்விர அணிகளும் 140 கோடிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் இந்திய அணி 71 போட்டிகளிலும், வெஸ்ட் இண்டீஸ் அணி 63 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. மேலும், 2 போட்டிகள் சமனில் முடிந்துள்ளது. 4 நான்கு போட்டிகளில் முடிவில்லை.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

WI vs IND 2nd odi match today


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->