மக்களே உஷார்! Unknown நம்பரில் இருந்து கால் வந்தால் எடுக்காதீர்கள்! 2 பெண்களிடம் 2 லட்சம் மோசடி!
2 lakh fraud by mysterious persons in Saligramam from two women
சாலிகிராமத்தில் இரண்டு பெண்களிடம் மர்மநபர்கள் நுதன முறையில் 2 லட்சம் மோசடி செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை சாலிகிராமம் ராஜேஷ் அவன்யூவை சேர்ந்தவர் பிரதீபா. இவர் சாஃப்ட்வேர் இன்ஜினியராக பணிபுரிந்து வருகிறார். சம்பவத்தன்று இவருக்கு செல்போனில் தொடர்பு கொண்ட மர்மநபர் நான் மும்பை போலீஸ் என்றும் உங்கள் வங்கி கணக்கில் சட்டத்துக்கு புறம்பாக பணம் சேர்த்து உள்ளதாக கூறி பிரதீபாவில் வங்கி கணக்கு விவரங்களை கேட்டதாக கூறப்படுகிறது.
பிரதீபாவும் காவல்துறை அதிகாரி பேசுகிறார் என்று நம்பி வங்கி கணக்கு விவரங்களை கொடுத்ததாக கூறப்படுகிறது. மேலும் இந்த வழக்கில் இருந்து தப்பிக்க நீங்கள் ரூ. 1.33 லட்சம் அனுப்ப வேண்டும் எனவும் கூறியுள்ளார்.
இதனால் பயந்து போன பிரதீபா என்ன செய்வது என்று தெரியாமல் அந்த மர்மநபர் கூறிய வங்கி கணக்கிற்கு பணத்தை செலுத்தி உள்ளார். அதன் பின்னர் அந்த நம்பர் தொடர்ந்து பணம் கேட்டு மிரட்டியை அடுத்து நூதன முறையில் மோசடியில் சிக்கியதை பிரதீபா அறிந்து அதிர்ச்சி அடைந்துள்ளார்.
இதே போன்ற சம்பவம் சாலிகிராமம் காந்திநகர் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த உஷா நந்தினி என்ற பெண்ணுக்கும் நடந்திருப்பதாக கூறப்படுகிறது. இணையதள சேவைக்காக ஆன்லைன் வாயிலாக வாடிக்கையாளர் சேவை என்னை தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.
மறுமுனையில் பேசியவர் அவர் வங்கி கணக்கு, ஏடிஎம் கார்டு விவரங்களை இவரிடம் கேட்டு தெரிந்து கொண்டதாக கூறப்படுகிறது. சிறிது நேரத்தில் அவரது வங்கி கணக்கில் இருந்து ரூ.97 ஆயிரம் எடுக்கப்பட்டதாக குறுந்தகவல் வந்ததை எடுத்து அதிர்ச்சி அடைந்துள்ளார்.
இந்தநிலையில் இந்த இரண்டு மோசடி சம்பவம் தொடர்பாக இரண்டு பெண்களும் விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை செய்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
English Summary
2 lakh fraud by mysterious persons in Saligramam from two women