13-ந்தேதி அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிப்பு!
All schools to remain closed on May 13
மாசி மகத்தையொட்டி வருகிற மார்ச் 13-ம் தேதி அன்று புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு கல்வித்துறை விடுமுறை அறிவித்துள்ளது.மேலும் அன்றைய தினம் பொதுத்தேர்வுகள் இருந்தால், அவை வழக்கம் போல நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி மாநிலத்தில் ஆண்டுதோறும் மாசி மகம் பெருவிழா வெகு விமரிசையாக நடைபெற்று வருவது வழக்கம். ஒவ்வொரு ஆண்டு மாசி மகம் திருவிழா நடைபெறும் வைத்திக்குப்பம் கடற்கரையில், புதுச்சேரி மட்டுமில்லாது தமிழகத்தைச் சேர்ந்த ஏராளமான கோயில்களைச் சேர்ந்த உற்சவர்கள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் புரிவது வழக்மாக நடைபெறுகிறது.
மேலும் அங்கு ஒரே இடத்தில் அனைத்து முக்கியக் கோயில்களின் உற்சவர்களும் எழுந்து அருள்வதால் ஏராளமான பக்தர்கள் மாசி மகத்துக்கு தங்கள் குடும்பத்துடன் வந்து சாமி தரிசனம் செய்வர். அந்த வகையில் நடப்பாண்டு மாசி மக பெருவிழா வருகிற 13-ம் தேதி வைத்திக்குப்பம் கடற்கரையில் நடைபெற உள்ளது.

இந்த நிலையில், மாசி மகத்தையொட்டி வருகிற மார்ச் 13-ம் தேதி அன்று புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு கல்வித்துறை விடுமுறை அறிவித்துள்ளது.மேலும் அன்றைய தினம் பொதுத்தேர்வுகள் இருந்தால், அவை வழக்கம் போல நடைபெறும் என்று கல்வித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
All schools to remain closed on May 13