பாம்பாறு அணை 4-வது மதகில் உடைப்பு: வெள்ள அபாய எச்சரிக்கை! - Seithipunal
Seithipunal


ஊத்தங்கரை பாம்பாறு அணையின் 4-வது மதகு ஏற்றி இறக்குவதற்கான இயந்திரத்தின் போரிங் உடைந்து அதிகளவு தண்ணீர் வெளியேறி வருவதால் பொதுப்பணித்துறை சார்பில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை பாம்பாறு அணையில் தொடர் கனமழை காரணமாக அதன் முழு கொள்ளளவான 19.6 அடியை எட்டியது. இதனை தொடந்து அணைக்கு வரும் சுமார் 5000 கனஅடி நீரும் முழுமையாக அதன் ஐந்து மதகு வழியாக வெளியேற்றப்பட்டு வந்தது

இந்த நிலையில், நள்ளிரவு 12.30  மணியளவில் அணையின் நான்காவது மதகு ஏற்றி இறக்குவதற்கான இயந்திரத்தின் போரிங் பழுதான நிலையில் அணையின் மொத்த நீரும் வெளியேறி வருகிறது. இதனால் பல லட்சம் மதிப்பிலான மீன்கள் வெளியேறி வருகின்றன.

முறையான பராமரிப்பு இல்லாததால் ஷட்டர் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், ஊத்தங்கரை பாம்பாறு அணையில் அணையில் இருந்து வெளியேறும் நீர் சாத்தனூர் அணை சென்றடைந்து கடலில் கலக்கிறது.

இதனை தொடர்ந்து, ஊத்தங்கரை வட்டாட்சியர் கோவிந்தராஜ் உள்ளிட்ட அதிகாரிகள் இது குறித்து விசாரித்து வருகின்றனர். மேலும், தருமபுரி மாவட்டம் வழியாக பாயும் தென்பெண்ணை ஆற்றுப் பகுதியி


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

bamparu dam shutter damage flood warning


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->