சென்னை விமான நிலையத்தில் கிடந்த கருப்பு நிற பை.! வெடிகுண்டு இருக்குமோ? பீதியில் அதிகாரிகள்.!
block colour bag found in chennai airport
சென்னை மீனம்பாக்கத்தில் உள்ள விமான நிலையத்தில் இருந்து வெளி நாடுகளுக்கும், உள் நாடுகளுக்கும் விமான சேவைகள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த விமான நிலையத்திற்கு வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
இந்த விமான நிலையத்தில், தங்கம், வெளிநாட்டு பணம், அரிய வகை உயிரினங்கள் உள்ளிட்டவை கடத்தப்பட்டு வந்த நிலையில், உள்நாட்டு முனையத்திற்கு வரும் பகுதியில் கருப்பு நிற பை ஒன்று டிராலியில் கிடந்தது.
இந்த பையை கண்காணிப்பு கேமராவில் பார்த்த மத்திய தொழில் பாதுகாப்பு படை போலீசார் சுதாரித்து கொண்டனர். அதன் பின்னர் அதிகாரிகளுக்கு அந்த பையில் வெடிகுண்டு இருக்குமோ? என்ற பீதி ஏற்பட்டது. இது குறித்து வெடிகுண்டு நிபுணர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அதன் படி, வெடிகுண்டு நிபுணர்கள் மோப்பநாயுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பையை சோதனை செய்தனர். ஆனால், அந்த பையில் எதுவும் இல்லை. காலி பையாக இருந்தது. இந்த பையால் விமான நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
English Summary
block colour bag found in chennai airport