புயலை எதிர்கொள்ள தயார் - மேயர் பிரியா பேட்டி!
Chennai Mayor priya say about Fengal cyclone
வங்கக்கடலில் உருவாகியுள்ள ஃபெஞ்ஜல் புயலை எதிர்கொள்ள சென்னை மாநகராட்சி தயார் நிலையில் உள்ளதாக மேயர் பிரியா தெரிவித்தார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த மேயர் பிரியா தெரிவித்தாவது, "சென்னையில் மழை இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதல்வர் புயல் அல்லது கனமழை போன்ற சூழ்நிலைகளுக்கும் தயாராக இருக்க அறிவுறுத்தியுள்ளார்.
மாநகராட்சியில் கடந்த மாதமே தாழ்வான பகுதிகளில் தண்ணீர் அகற்ற 100 குதிரைத்திறன் கொண்ட 110 மோட்டார்கள் அமைக்கப்பட்டிருந்தன.
தற்போது கூடுதலாக 60 மோட்டார்கள் கொள்முதல் செய்யப்பட்டு, சில பகுதிகளில் அவசரகால தேவைகளுக்காக தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
கால்வாய்களில் தூர்வாரும் பணிகள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன. மேலும், ஆகாயத்தாமரை மற்றும் பிற குப்பைகளை நீக்கும் பணிகளும் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மழை வருவதை முன்னிட்டு, மாநகராட்சி 28,000 பணியாளர்களை பணியில் இருப்பார்கள், கூடுதலாக ஒவ்வொரு வார்டுக்கும் 10 பேர் நியமிக்கப்பட்டு உணவு விநியோகம், மீட்பு பணிகளில் ஈடுபடுவார்கள். மேலும், மாநகராட்சியுடன் தன்னார்வலர்கள் இணைந்து செயல்பட உள்ளனர்" என மேயர் பிரியா தெரிவித்தார்.
English Summary
Chennai Mayor priya say about Fengal cyclone