சென்னை மக்களுக்கு நல்ல செய்தி! பயன்பாட்டுக்கு வந்த நவீன தொழில் நுட்பத்துடன் கூடிய பேருந்துகள்! - Seithipunal
Seithipunal


சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்தில் மேலும் 66 தாழ்தளப் பேருந்துகள் பயன்பாட்டுக்கு வந்து உள்ளதாக மாநகர போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.

சென்னையில் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்வரை பயன்பாட்டில் இருந்துவந்த தாழ்தளப் பேருந்து சேவை, சாலை வசதி, மெட்ரோ பணி காரணமாக நிறுத்தப்பட்டது. 

இந்த நிலையில், மாற்றுத் திறனாளிகள் பயன்பெறும் வகையில் மீண்டும் தாழ்தளப் பேருந்துகள் இயக்க நீதிமன்றம் உத்தரவின்படி, மாநகர போக்குவரத்துக் கழகத்துக்கு நவீன தொழில் நுட்பத்துடன் கூடிய 611 தாழ்தளப் பேருந்துகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன.

முதல்கட்டமாக 58 பேருந்துகளை கடந்த மாதம் அமைச்சர் உதயநிதி தொடங்கி வைத்தார். இந்நிலையில், இரண்டாம் கட்டமாக 66 புதிய தாழ்தளப் பேருந்துகள் பயன்பாட்டுக்கு வந்துள்ளன. இந்த பேருந்துகள் 

அம்பத்தூர் தொழிற்பேட்டை - வேளச்சேரி, 
தாம்பரம் - செங்குன்றம், 
கோயம்பேடு - அண்ணா சதுக்கம் உள்ளிட்ட 11 வழித் தடங்களில் இயக்கப்படுவதாக மாநகர போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.

இந்த பேருந்துகளில் உள்ள வசதிகள்: இறங்கு தளத்தின் உயரத்தை 60 மி.மீ குறைத்து (kneeling) பயணிகள் ஏறிய பிறகு, பழைய உயரத்துக்கு மாற்றிக் கொள்ளும் வசதி உள்ளது. மேலும், மாற்றுத்திறனாளிகள் சக்கர நாற்காலியுடன் ஏறி, இறங்குவதற்கு சாய்தள வசதி உள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chennai MTC Lower floor Bus


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->