புதுக்கோட்டை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை - எப்போது தெரியுமா?
coming 10th local holiday to putukottai district
தமிழகத்தில் அரசு விடுமுறை, பொது விடுமுறை இல்லாமல் பிரசித்தி பெற்ற கோவில் விழாக்கள், முக்கிய பிரபலங்களின் பிறந்த நாள் மற்றும் நினைவு நாள் உள்ளிட்டவைகளுக்கு அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் விடுமுறை அளிக்கலாம் என்றுத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள அனைத்து பள்ளி, கல்லூரி மற்றும் அரசு அலுவலகங்களுக்கு வருகிற 10-ந்தேதி விடுமுறை அளித்து ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவில் திருவிழா மிகவும் விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தக் கோவில் திருவிழாவை முன்னிட்டு வருகிற 10-ந்தேதி புதுக்கோட்டை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் அருணா உத்தரவிட்டுள்ளார்.
English Summary
coming 10th local holiday to putukottai district