மனைவி தகாத உறவு வைத்திருந்தால் விவாகரத்து செய்யலாம் - நீதிமன்றம் அதிரடி உத்தரவு.! - Seithipunal
Seithipunal


சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள ராய்கர் மாவட்டத்தைச் சேர்ந்த நபர் ஒருவர், தனது மனைவியின் தகாத உறவையடுத்து, விவாகரத்து கேட்டு ராய்கர் கீழமை நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை கீழமை நீதிமன்றம் நிராகரித்ததனால், அந்த நபர் சத்தீஸ்கர் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். 

அந்த மனுவில், மனைவியின் நடத்தையில் திடீரென மாற்றம் ஏற்பட்டதாகவும், அற்ப விஷயங்களில் அடிக்கடி தகராறு ஏற்படுவதாகவும் கணவர் தெரிவித்துள்ளார். மேலும் மே 27, 2014 அன்று, தனது மனைவி, வீட்டை விட்டு வெளியேறி அதேபகுதியில் உள்ள வேறொரு நபரின் வீட்டில் தங்கியுள்ளார். அப்போது மனைவியும், அந்த நபரும் தனிமையில் இருந்ததாகவும் அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார். 

கணவரின் கூற்றுகளை ஆதரித்து, கணவர் இல்லாத நேரத்தில் ஒரு ஆண் நண்பர் தனது வீட்டிற்குச் சென்றதாக குறுக்கு விசாரணையின் போது மனைவி ஒப்புக்கொண்டார். இதையடுத்து, இந்த ஜோடி ஆறு ஆண்டுகளுக்கும் மேலாக தனித்தனியாக வாழ்ந்து வருவதால், திருமண முறிவு திரும்பப் பெற முடியாதது என்று நீதிமன்றம் குறிப்பிட்டது. 

இந்தத் தீர்ப்பை மேற்கோள்காட்டி, சத்தீஸ்கர் உயர் நீதிமன்றம், நீண்ட காலப் பிரிவினை மனக் கொடுமைக்கு இட்டுச் செல்லும் என்றும், திருமண உறவுகளைத் துண்டிக்க வேண்டியதிருக்கும் என்றும் இது இந்து திருமணச் சட்டத்தின் கீழ் திருமணத்தை ரத்து செய்ய வழிவகை செய்கிறது என்று கூறி இருவருக்கும் விவாகரத்து வழங்கி தீர்ப்பளித்தது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

court order conform divorce wife living relationship


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->