திண்டுக்கல்: தடுப்பூசி செலுத்திய 2 மணிநேரத்தில் விவசாய கூலித்தொழிலாளி மரணம்..!
Dindigul Sempatty 53 Aged Man Raja Died After Covishield Vaccination Within 2 Hours
கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாமில், தடுப்பூசி செலுத்திக்கொண்டு 53 வயது விவசாய கூலித்தொழிலாளி இரண்டு மணிநேரத்தில் மரணமடைந்த சோகம் நடந்துள்ளது.
தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம்கள் செயல்படுத்தப்படுகிறது. பொதுமக்கள் திரளாக கலந்துகொண்டு கோவேக்சின் மற்றும் கோவிட்ஷீல்டு தடுப்பூசியை செலுத்திக்கொள்கின்றனர்.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள செம்பட்டி காந்திநகர் பகுதியை சார்ந்தவர் ராஜா (வயது 53). இவர் விவசாய கூலித்தொழிலாளி ஆவார். இன்று காந்திநகர் பகுதியில் கொரோனா சிறப்பு தடுப்பூசி முகாம் நடைபெற்றுள்ளது.
அங்கு, ராஜா கோவிட்ஷீல்டு தடுப்பூசியை செலுத்திக்கொண்டுள்ளார். பின்னர் வீட்டிற்கு வந்த நிலையில், இரண்டு மணிநேரத்தில் நெஞ்சு வலிக்கிறது என்றும், மயக்கம் வருவதாகவும் கூறியவாறு கீழே விழுந்துள்ளார்.
இதனைக்கண்டு பதறிப்போன குடும்பத்தினர் அவசரம் அவசரமாக ஆத்தூரில் இருக்கும் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்ற நிலையில், அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் சோதனை செய்துவிட்டு இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.
இதனால் அவரது குடும்பத்தினர் பெரும் சோகத்திற்கு உள்ளாகியுள்ளனர். இந்த விஷயம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள செம்பட்டி காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Tamil online news Today News in Tamil
பொது எச்சரிக்கை: கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.
English Summary
Dindigul Sempatty 53 Aged Man Raja Died After Covishield Vaccination Within 2 Hours