எங்கிட்டயே காசு கேக்குறியா..? சுங்கச்சாவடி ஊழியரை புரட்டி எடுத்த திமுகவினர்.!! - Seithipunal
Seithipunal


வேலூர் மாவட்டத்தில் சுங்கச்சாவடி கட்டணம் செலுத்த மறுத்து ஊழியர்கள் மீது திமுகவினர் கொடூர தாக்குதல்.!!

வேலூர் மாவட்டம் வல்லம் என்ற பகுதி வழியாக செல்லும் ஆரணி சாலையில் சுங்கச்சாவடி அமைந்துள்ளது. அணைக்கட்டு பகுதியைச் சேர்ந்த திமுக பிரமுகர் மணிமாறன் என்பவர் வேலூர் செல்வதற்காக இந்த சுங்கச்சாவடி வழியே காரில் சென்றுள்ளார். அப்போது திமுக பிரமுகர் மணிமாறன் சுங்கச்சாவடியை கடக்க இருசக்கர வாகனங்கள் செல்லும் பாதையில் தனது காரை செலுத்தியுள்ளார்.

இதனால் சுங்கச்சாவடி ஊழியர்கள் காரை மறைத்து சுங்க கட்டணம் செலுத்துமாறு அறிவுறுத்தியுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த திமுக பிரமுகர் மணிமாறன் கட்டணம் செலுத்த முடியாது என ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். 

இந்த வாக்குவாதம் முற்றியதில் திமுக பிரமுகர் மணிமாறனுடன் வந்திருந்த அவருடைய ஆதரவாளர்கள் சுங்கச்சாவடி ஊழியர்களை கொடூரமாக தாக்கினார். இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு தொற்றிக் கொண்டது. 

இந்த தாக்குதலில் சுங்கச்சாவடி பெண் ஊழியர்கள் உட்பட 3 பேர் படுகாயம் அடைந்த நிலையில் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக சுங்கச்சாவடி ஊழியர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்த போது காவல்துறையினர் அவர்களிடம் சமாதானம் பேசி திருப்பி அனுப்பியதாக குற்றம் சாட்டியுள்ளனர்.இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி தற்பொழுது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

DMK cadres attacked toll plaza employees in Vellore


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->