தி.மு.க. ஆட்சியாளர்கள் பாரதியாரை கொண்டாடுவதில்லை'.. தமிழிசை சவுந்தரராஜன் ஆதங்கம்!  - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் தி.மு.க. ஆட்சியாளர்கள் பாரதியாரை கொண்டாடுவதில்லை என தமிழிசை சவுந்தரராஜன் விமர்சித்துள்ளார்.

மகாகவி பாரதியாரின் 143-வது பிறந்தநாள் விழா இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி சென்னை கிண்டி கவர்னர் மாளிகையில் இன்று பாரதியார் பிறந்தநாள் விழா கொண்டாட்டம் நடைபெற்றது. அப்போது அங்கு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த பாரதியாரின் உருவ படத்திற்கு கவர்னர் ஆர்.என்.ரவி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

அதனை தொடர்ந்து பாரதியாரின் தீவிர பற்றாளர்களுடன் சேர்ந்து பாரதியின் சிலை பல்லக்கு ஊர்வலத்தை கவர்னர் ஆர்.என்.ரவி கொடியசைத்துத் துவக்கி வைத்து பல்லக்கை தூக்கி சென்றார். இந்த ஊர்வலம் அங்கு உள்ள மகாகவி பாரதியாரின் நினைவு இல்லத்துக்குச் சென்றதும் பாரதியாரின் சிலை அங்கு வைக்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது.

இதேபோல சென்னை காமராஜர் சாலையில் பாரதியார் உருவப்படத்திற்கு இன்று தமிழக பா.ஜ.க. முன்னாள் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். 

இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசியபோது அவர் கூறியதாவது;-"மகாகவி பாரதியார் பெண்களின் முன்னேற்றத்திற்காக பாடுபட்டார். ஆனால் தமிழகத்தில் துரதிருஷ்டவசமாக தி.மு.க. ஆட்சியாளர்கள் பாரதியாரை கொண்டாடுவதில்லை. அவர்கள் பாரதிக்கு பெரிய விழா எடுக்க வேண்டும். பெண்களுக்காகவும், பெண் உரிமைகளுக்காகவும் பாரதி பாடினார்.

ஆனால் பெரியாரை பெண்ணுரிமைக்கு அடையாளமாக சொல்லும் இந்த அரசு, பெரியாருக்கு முன்னாலேயே பெண்ணுரிமை, பெண் விடுதலை பற்றி பாடிய பாரதிக்கு உரிய அங்கீகாரத்தை கொடுப்பது இல்லை. தமிழக அரசு பெண்களுக்கு எதிரான அரசாக இருக்கிறது. பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தமிழகத்தில் அதிகரித்திருக்கிறது."இவ்வாறு தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

DMK rulers don't celebrate Bharathiar Tamilisai Soundararajan 


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->