சீமான் வீட்டில் அதிரடி காட்டிய இன்ஸ்பெக்டர் யார் தெரியுமா? - Seithipunal
Seithipunal


நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வீட்டில் புகுந்து போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரவின் ராஜேஷ் இருவரை கைது செய்தார். இவ்வாறு சீமான் வீட்டில் அதிரடியாக நுழைந்து கைது செய்த போலீஸ் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரவின் ராஜேஷ் யார் என்று தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

சீமான் மீது நடிகை விஜயலட்சுமி பாலியல் புகார் அளித்திருந்தார். குறித்த பாலியல் புகார் விசாரணைக்கு சென்னை வளசரவாக்கம் போலீஸ் ஸ்டேசனில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆஜராக வேண்டும் என போலீசார் சம்மன் அனுப்பியிருந்தனர். 

ஆனால், சீமான் ஆஜராகவில்லை. அதன் காரணமாக அவரது வீட்டு கதவில் போலீசார் சம்மனை இன்று (பிப்ரவரி 27) ஒட்டினர். ஆனால், அந்த சம்மனை, அங்கிருந்த காவலாளி கிழித்துள்ளார். இதன் காரண்மாக அங்கு போலீசாருக்கும், காவலாளிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. 

தகவல் அறிந்த நீலாங்கரை இன்ஸ்பெக்டர் பிரவின் ராஜேஷ் தலைமையிலான போலீசார், அங்கு வந்து அமல்ராஜ் உள்ளிட்ட இருவரை கைது செய்தனர்.

இன்ஸ்பெக்டர் பிரவின் ராஜேஷ் கதவை திறந்து கொண்டு உள்ளே நுழைந்தபோது, பாதுகாவலர் தடுத்தது, அவரை மடக்கி இழுத்து வெளியே கொண்டு வந்து ஜீப்பில் ஏற்றிய விதம், சீமானின் மனைவி நேரடியாக வந்து போலீசாரிடம் மன்னிப்பு கேட்டது உள்ளிட்ட சம்பவங்கள் இடம்பெற்றது. இதன் காரணமாக அந்தப் பகுதியே போர்க்களம் போல காட்சி அளித்த வீடியோ காட்சிகள் இன்று காலை முதல் இணையத்தில் வைரலானது.

இந்நிலையில், இவ்வாறு அதிரடியில் இறங்கிய இன்ஸ்பெக்டர் பிரவின் ராஜேஷ் யார் துன்று சமூக வலைத்தளங்களில் கேள்விகளாக வந்த நிலையில், பிரவின் ராஜேஷின் தந்தை ராஜகுரு. இவரும் போலீஸ் இன்ஸ்பெக்டர் என தெரியவந்துள்ளது. அவர் முன்னாள் பிரதமர் ராஜிவ் படுகொலை செய்யப்பட்ட போது உயிரிழந்தவர்களில் ஒருவர் என குறிப்பிடப்படுகிறது.

பிரவின் ராஜேஷுக்கு அப்போது வயது 16. தந்தை மரணத்தை பார்த்ததும், நாட்டிற்கு சேவை செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் போலீஸ் வேலைக்கு வந்துள்ளார். இவரது தாயார், ராஜிவ் கொலை வழக்கில் கைதான பேரறிவாளனை விடுதலை செய்யக்கூடாது என சட்டப்போராட்டம் நடத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Do you know who the inspector who took action at Seeman house today


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->