புது தகவல்!!! டிரைவர் இல்லா மெட்ரோ ரெயிலா!!! 2 ஆம் கட்ட சோதனை ஓட்ட நாள்? - மெட்ரோ அதிகாரிகள் - Seithipunal
Seithipunal


சென்னை மாநகரில்  மெட்ரோ ரெயில் திட்டமானது, 116 கி.மீ. தூரத்துக்கு 3 வழித்தடங்களில் 2-ம் கட்டசோதனை செயல்படுத்தப்படுகிறது. இதில் முக்கியமான வழித்தடமான கலங்கரை விளக்கம் - பூந்தமல்லி நெடுஞ்சாலை இடையேயான தடத்தில் கலங்கரை விளக்கம் முதல் கோடம்பாக்கம் மேம்பாலம் வரை சுரங்கப்பாதையாகவும், கோடம்பாக்கம் பவர் ஹவுஸ் முதல் பூந்தமல்லி நெடுஞ்சாலை வரை மேம்பால பாதையாகவும் இது அமைகிறது.

இதில் பூந்தமல்லி - போரூர் இடையே பல இடங்களில் ரெயில் பாதை அமைக்கும் பணி, பொறியியல் கட்டுமானப்பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன.மேலும் பூந்தமல்லி- போரூர் இடையே வரும் டிசம்பரில் சேவை தொடங்குகிற நிலையில் இதற்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

இதற்கிடையே இந்த தடத்தில் ஒரு பகுதியாக பூந்தமல்லி - முல்லைத்தோட்டம் இடையே 3 கி.மீ. தூரம் அமைக்கப்பட்டுள்ள மேம்பால பாதையில் கடந்த 20-ந்தேதி மாலை டிரைவர் இல்லாத மெட்ரோ ரெயில் இயக்கி சோதனை ஓட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து நடைபெற்ற சோதனை ஓட்டம் தொழில் நுட்ப கோளாறு காரணமாக ஏற்பட்ட தடங்கல்களை தாண்டி நள்ளிரவில் வெற்றிக்கரமாக நடைபெற்று முடிந்தது.

இதனால் பூந்தமல்லி- போரூர் இடையேயான மெட்ரோ ரெயில் சேவை டிசம்பர் மாதம் முதல் மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என மெட்ரோ ரெயில் மேலாண்மை இயக்குநர் சித்திக் தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில், டிரைவர் இல்லாத மெட்ரோ ரெயிலின் 2-ம் கட்ட சோதனை ஓட்டம் அடுத்த மாதம் 20-ந்தேதிக்கு மேல் நடைபெறும் என்று மெட்ரோ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.இது தற்போது பயணிகளிடையே பெரும் எதிர்பார்ப்பை  ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Driverless Metro Rail Phase 2 test drive day Metro officials inform


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->