அரசு 2 ஆயிரம் வழங்கும் விவகாரத்தில் திடீர் திருப்பம் - இன்று அவசர அவசரமாக மேற்கொள்ளப்படவிருக்கும் நடவடிக்கை.!
edappadi announced 2 thousand rupees for bpl
சிறப்பு நிதி ரூ.2 ஆயிரம் வழங்குவதற்கு எதிரான முறையீட்டை, வழக்காக தாக்கல் செய்யப்படும் பட்சத்தில் இன்று உயர்நீதிமன்றம் அதனை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உள்ளது.
கஜா புயல் பாதிப்பு மற்றும் வறட்சியை கருத்தில் கொண்டு தமிழகத்தில் 60 லட்சம் ஏழை தொழிலாளர் குடும்பங்களுக்கு தலா 2000 ரூபாய் சிறப்பு நிதி உதவி வழங்கப்படும் என்று சட்டமன்றத்தில் முதலமைச்சர் எடப் பாடி பழனிசாமி அறிவித்தார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் மணிக் குமார், சுப்பிரமணியம் பிரசாத் அமர்வு முன்பு சட்டப்பஞ்சாயத்து இயக்கம் சார்பில் முறையீடு தாக்கல் செய்யப்பட்டது.
அந்த முறையீட்டில், மக்களவை தேர்தலுக்காக 60 லட்சம் வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுக்கும் வகையில் இந்தஅறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாகவும் அரசு புள்ளிவிவரங் களின்படி 11 சதவீதம் பேர் தான் வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளதாகவும் அதன்படி அந்தி யோதயா அட்டை வைத்துள்ள 18 லட்சம் பேர் மட்டுமே வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளதாகவும், 60 லட்சம் பேருக்கு நிதியுதவி வழங்கக் கூடாது என்றும் பொதுமக்கள் வரிப்பணம் வீணடிக்கப்படுவதாகவும் கூறப்பட்டது.
இதனை அவசர வழக்காகவிசாரிக்க வேண்டும் என்றும் கோரப்பட்டது. இதனை மனுவாக தாக்கல் செய்தால் வியாழனன்று (இன்று) விசாரணைக்கு ஏற்பதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.
இந்த நிலையில் இது தொடர்பான வழக்கு இன்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. 2 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுமா..? இல்லை வழங்க தடை விதிக்கப்படுமா..? என்ற சந்தேகத்திற்கான தீர்வு இன்று மாலைக்குள் தெரிய வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
English Summary
edappadi announced 2 thousand rupees for bpl