ஈரோடு || தாய் கண்டித்த ஆத்திரம் - பொறியியல் மாணவி எடுத்த விபரீத முடிவு.!
engineering student sucide in erode
ஈரோடு மாவட்டத்தில் உள்ள பள்ளியபாளையம் பகுதியைச் சேர்ந்தவர்கள் தங்கராசு-சித்ரா தம்பதியினர். இவர்களுடைய மகள் பிரதீபா, கவுந்தப்பாடியில் உள்ள ஒரு தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் இ.சி.இ. முதலாம் ஆண்டு படித்து வந்தார்.
இந்த நிலையில், பிரதீபா வீட்டில் இருக்கும்போது அடிக்கடி செல்போனில் விளையாடிக்கொண்டிருந்துள்ளார். இதைப்பார்த்த சித்ரா மகளை கண்டித்துள்ளார். இதனால், மன உளைச்சலுக்கு ஆளான பிரதீபா கடந்த மாதம் விஷம் குடித்து மயங்கி விழுந்துள்ளார்.
உடனே வீட்டில் இருந்தவர்கள் பிரதீபாவை மீட்டு சிகிச்சைக்காக அந்தியூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அதன்பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், பிரதீபா சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
செல்போனில் கேம் விளையாடியதை தாய் கண்டித்ததால் என்ஜினீயரிங் மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
English Summary
engineering student sucide in erode