சேகர் பாபுவிடம் கேள்வி எழுப்பிய ஓ.பன்னீர்செல்வம் - அவையில் குலுங்கி சிரித்த இபிஎஸ்..!
eps smile ops question say to minister sekar babu
சமீபத்தில் தமிழக சட்டசபையில் நடப்பாண்டுக்கான முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிலையில், இன்று பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்றது.
அப்போது, திருவாலங்காடு கோவிலில் மாந்திரீக பூஜைக்கு போதிய வசதியில்லை என்று திருவள்ளூர் எம்.எல்.ஏ. ராஜேந்திரன் பேசினார். இது தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் அமைச்சர் சேகர்பாபுவிடம் கேள்வி எழுப்பினார்.

இதற்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குலுங்கி குலுங்கி சிரித்தார். அதன் பின்னர் பரிகார பூஜையைத்தான் தவறுதலாக மாந்திரீக பூஜை என்று சொன்னேன் என எம்.எல்.ஏ. ராஜேந்திரன் விளக்கமளித்தார்.
இதைத் தொடர்ந்து, மாந்திரீகம் பற்றி ஓ.பன்னீர்செல்வத்திற்கு தெரியாதது ஒன்றுமில்லை. ஆன்மிகவாதியான ஓ.பன்னீர்செல்வம், பல கோவில்களுக்கு சென்று எண்ணங்கள் நிறைவேற வழிபடுபவர் என்று சேகர்பாபு தெரிவித்தார். இந்த விவாதத்தின்போது சட்டசபையில் சிரிப்பலை எழுந்தது.
English Summary
eps smile ops question say to minister sekar babu