ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: இன்று மாலையுடன் பிரசாரம் ஓய்வு.. வெளியூர் கட்சி நிர்வாகிகள் வெளியேற உத்தரவு! - Seithipunal
Seithipunal


இன்று மாலை 6 மணிக்கு பிறகு தேர்தல் பிரசாரம் செய்ய அனுமதி இல்லை என்றும்  ஈரோட்டில் தங்கி இருக்கும் வெளியூர் கட்சி நிர்வாகிகள் இன்று மாலை 5 மணிக்குள் வெளியேற தேர்தல் ஆணையமானது உத்தரவிடப்பட்டுள்ளது. 

ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் சமீபத்தில் மரணம் அடைந்ததை தொடர்ந்து ஈரோடு கிழக்கு தொகுதிக்கு வரும் 5-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது என தேர்தல் ஆணையம் அறிவித்தது . இதையடுத்து இதற்கான அறிவிப்பு கடந்த 7-ந் தேதி வெளியான உடனேயே ஈரோடு கிழக்கு தொகுதியில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தன.

அதனை தொடர்ந்து கடந்த 20-ந் தேதி இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதில் மொத்தம் 46 வேட்பாளர்கள்  ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தலில் களத்தில் உள்ளனர்.இதையடுத்து அங்கு அரசியல் கட்சினர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர் ,இன்று இறுதிக்கட்ட பிரச்சாரம் அனல்பறக்கிறது. இறுதிக்கட்ட பிரசாரம் வேகமெடுத்து உள்ளது என்று சொல்லலாம் .திமுக ,நாம் தமிழர் கட்சிகளை சேர்ந்த மூத்த தலைவர்கள்  முகாமிட்டு பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். இதைத்தொடர்ந்து அரசியல் கட்சிகளின்  முற்றுகையால் தேர்தல் களம் தொடர்ந்து பரபரப்பாக காணப்படுகிறது.மேலும் இன்று மாலை 6 மணிக்கு பிறகு தேர்தல் பிரசாரம் செய்ய அனுமதி இல்லை என்றும்  ஈரோட்டில் தங்கி இருக்கும் வெளியூர் கட்சி நிர்வாகிகள் இன்று மாலை 5 மணிக்குள் வெளியேற தேர்தல் ஆணையமானது உத்தரவிடப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து ஈரோடு கிழக்கு தொகுதி முழுவதும் 3 நிலை கண்காணிப்பு குழுவினர், 3 தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் இது தவிர 12 இடங்களில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக சோதனை சாவடிகளில் துணை ராணுவத்தினருடன் உள்ளூர் போலீசார் இணைந்து வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து நாளை மறுநாள் புதன்கிழமை ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது என்றும் . இதற்காக 53 இடங்களில் 237 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில்  ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலையொட்டி தொகுதியில் உள்ள டாஸ்மாக் கடைகளை மூட மாவட்ட நிர்வாகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அதாவது இன்று முதல் 5-ந் தேதி வரையும் மற்றும் வாக்குகள் எண்ணப்படும் நாளான பிப்ரவரி 8-ந் தேதியும் டாஸ்மாக் கடைகளை மூட மாவட்ட கலெக்டர் ராஜ கோபால் உத்தரவு பிறப்பித்துள்ளார்.இந்த தடையை மீறி மதுபானம் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர்  தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Erode East bypoll: Campaigning ends today Outside party executives ordered to leave


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->